நாற்பது பாட்டிகளுடன் தருண்கோபி நடிக்கும் “ வெறி “ ( திமிரு – 2 )

திமிரு, காளை போன்ற வெற்றி படங்களை இயக்கிய தருண்கோபி இயக்கி நாயகனாக நடிக்கும் படம் “ வெறி “ (திமிரு – 2 ) இந்த படத்தை கோயம்பேடு மார்கெட் மு.வெள்ளைப் பாண்டி ஆசியுடன் S.S. PRODUCTION என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.சரவணன் தயாரிக்கிறார்.

இன்னொரு நாயகனாக ரமணா நடிக்கிறார். கதாநாயகியாக காதல் சந்தியா, ஒரு புதுமுக நடிகை ஒருவரும் நடிக்கிறார். மற்றும் சுஜாதா, காதல்சுகுமார், முத்துராமன், பரதேசி பாட்டி, கும்கி பாட்டி, மனோஜ், தவசி, ராம்சிங், விருமாண்டி, சேரன்ராஜ், விசித்திரன், தீப்பெட்டி கணேஷன்,வைரவன், ரேவதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தில் திருப்பு முனை கதாப்பாத்திரத்தில் பங்களா மூர்த்தி நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – சேவிலோராஜா
இசை – ஸ்ரீகாந்த்தேவா
பாடல்கள் – நா.முத்துகுமார், தருண்கோபி, ஸ்ரீகாந்த்தேவா.
எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ் / ஸ்டன்ட் – டி.ரமேஷ் / கலை – மணிகார்த்திக்
நடனம் – சுஜாதா, காதல்கந்தாஸ்.
தயாரிப்பு நிர்வாகம் – எம்.ஜி.சிவகுமார்
தயாரிப்பு – எஸ்.சரவணன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தருண்கோபி.

படம் பற்றி இயக்குனர் கூறியது…

முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் பக்கா கமர்ஷியல் படம். திமிரு படத்தை போலவே இந்த படத்திலும் விறுவிறுப்பான திரைக்கதை இருக்கும். படத்தில் எமோஷனல்,காதல் மோதல் என படம் முழுக்க அதிரடியாக இருக்கும். மதுரை, திண்டுக்கல், வத்தலகுண்டு, உசிலம்பட்டி போன்ற ஊர்களில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதை.

படத்திற்காக 35 நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம். சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக இந்த படத்தில் நாற்பது பாட்டிகள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படம் தயாராகி வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் தருண்கோபி.

Read previous post:
BaahuBali Tamil Trailer

https://youtu.be/CYcKs5fknb8

Close