நாலு கோடிய எண்ணி வச்சுட்டு எங்க வேணா போ… – குத்து ரம்யாவுக்கு குடைச்சல் தரும் ஹீரோ!

இப்போதெல்லாம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடும்போதே ‘பாதியில விட்டுட்டு ஓடிட மாட்டீங்களே… ’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுதான் நடிகைகளுக்கு அட்வான்சே கொடுக்க வேண்டும் போலிருக்கிறது. முடிந்தால் ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்தையும் சேர்க்கலாம். ‘படத்திலிருந்து பாதியில் ஓடினால் உரிய நஷ்டத்திற்கு நான் பொறுப்பு’ என்று. அந்தளவுக்கு நாளொரு அஞ்சலியும் பொழுதொரு திவ்யாவும் பெருகி வருகிறார்கள் இங்கே.

ஊர் சுற்றி புராணம் என்றொரு படத்திலிருந்து பாதியிலிருந்து ஓடி, கண்டவர்கள் வாயிலும் டூத் பேஸ்டாக பிதுக்கிக் கொள்ள நேர்கிறது அஞ்சலிக்கு. இவரைப்போலவே கன்னட படம் ஒன்றை பாதியில் கைகழுவி விட்டுவிட்டார் குத்து ரம்யா என்கிற திவ்யா. நீர்டோஸ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் அவருக்கு மாண்டியா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. எம்.பி.யாகவும் ஆகிவிட்டார். இனிமேல் நான் நீர்டோஸ் படத்தில் நடித்தால் அது நாகரிகமில்லை என்று பேட்டியளித்திருக்கிறார் அவர்.

இதனால் படத்தின் ஹீரோவான ஜெகதீஷ் செம அப்செட். ஒரு நடிகை பாதியில் ஒரு படத்தை விட்டுவிட்டு போக முடியாது. அப்படி போவதாக இருந்தால் இந்த படத்திற்கு இதுவரை நாலு கோடி செலவாகியிருக்கிறது. அதை கொடுத்துவிட்டு போகட்டும் என்று கூறியிருக்கிறார்.

நெப்போலியன் கூட மத்திய அமைச்சரான பின்பும் சபாநாயகரிடம் அனுமதி பெற்று படத்தில் நடித்தார். இந்த விஷயத்தில் திவ்யா நெப்போலியனை பின்பற்றலாமே?

Trouble brewing for Divya as she carries Rs.20 crores in Kannada film industry

It’s a known fact that actress Ramya aka Divya Spandana, has become a busy bee in politics, and her political career has left the producers of her upcoming movies in lurch. Sources from the Kannada film industry say that the producers of Ramya’s upcoming movies – Aryan, Neer Dose, Dil Ka Raja and an untitled bilingual flick, have invested Rs 20 crores in total. Before contesting in election, the actress had started the shooting of few movies, which she had signed. After the election, she has become busy with her political commitments. After becoming an MP, Ramya seems to have hinted saying, “Public will not accept an MP who is running around trees in short skirts and sleeveless blouses”. She has also said that she will be very busy in politics from January 2014, for the Lok Sabha polls, which will be held in May 2014.

Meanwhile, Jaggesh, who is paired opposite Ramya in Neer Dose, had raised his voice on Twitter, after he had heard that Ramya will not be doing the movie. He had asked the actress to bear the cost of movie making. Ramya refuted his charge saying that she had given the dates for the film in June, when the makers did not shoot the film then. Ramya has asked Ambareesh to solve the issue as his words will be final in Sandalwood. It is a open fact that Ambareesh played a dominant role in Ramya’s victory.

While we appreciate her efforts to solve the issue amicably, it will be good in the interest of her future – whether in politics or in Cinema – to ensure the affected parties are not put into financial loss. After all, she should realise that she is popular today because of Cinema, and that popularity was the main reason for her success in the election.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அழகுராஜாவில் ட்வென்ட்டி மினிட்ஸ் வெட்டு?

  காய்ஞ்சுப்போன பன்னுக்கு எவ்வளவுதான் டெகரெஷன் செய்தாலும் அது பிறந்த நாள் கேக் ஆகிவிடாது. இப்படியொரு அபத்த களஞ்சியமான விமர்சனத்தை ரிலீசுக்கு முன்பு வரை சற்றும் எதிர்பார்த்திருக்க...

Close