நாலு செல்வராகவன் படத்துக்கும், ரெண்டு சாமி படத்துக்கும் சமம்.

அமெரிக்காவிலிருக்கும் ‘சரவணபவன்’ ஓட்டலுக்கு இவர்தான் இன்சார்ஜ்! ஆனால் இவர் இயக்கிய ‘பியூச்சர் அசாசின்’ படத்தின் ஓப்பனிங் சீன், நாலு செல்வராகவன் படத்துக்கும், ரெண்டு சாமி (இது உயிர் சாமிங்க) படத்துக்கும் சமம். ஹாலிவுட்டில் பாடம் படித்துவிட்டு அமெரிக்காவில் படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் யூனுஸ் சாஹுல் ஒரு சென்னை தமிழர்.

இப்படத்தின் ஸ்பெஷல் பத்திரிகையாளர் ஷோவை நேற்று ஏற்பாடு செய்திருந்தார் யூனுஸ். தமிழ்சினிமாவின் குட்டி நட்சத்திரங்கள் சுமார் ஒரு டஜன் பேர் யூனுசுக்கு வாழ்த்துக்களை சொல்ல நேரில் வந்திருந்தார்கள். என்னுடைய படம் கேன்ஸ் திரைப்பட விழாவிலும், வேறு பல விழாக்களிலும் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிக் கொண்டு வருகிறது. ஆனால் சென்னையில் நான் லாஞ்ச் ஆகணும் என்கிற விருப்பம் மட்டும் தள்ளிப் போய் கொண்டேயிருந்தது. இதோ அந்த நாள் இன்னிக்கு வந்திருக்கு. ரொம்ப சிலிர்ப்பாவும் சந்தோஷமாகவும் இருக்கு என்றார் யூனுஸ்.

பியூச்சர் அசாசின் படக்கதை என்ன?

எப்பொழுதும் நாட்டு நலனைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாலும், அதற்கான முயற்சியை எங்கே இருந்து ஆரம்பிப்பது என்பது தெரியாமல் கிட்டத்தட்ட சோம்பேறிகளாக இருக்கும் ஐந்து பேர். அவர்களுக்குப் பணத்திற்கும் தட்டுப்பாடு. இவர்களைப் பற்றியும் இவர்களது பணப்பிரச்சினை பற்றியும் அறிந்த ஃபியூச்சர் மேன் – ஒரு முதியவர் அவர்களுக்குப் பணம் வருவதற்கான ஒரு வழியினைச் சொல்லுகிறார். 2012 ல் அமெரிக்க பிரசிடெண்ட் ஆகும் நினைப்பவுடன் உள்ள உள்ளூர் கவர்னர் மகனைக் கடத்தினால் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார். ஏனென்றால் அவன் அமெரிக்க பிரசிடெண்ட் ஆகிவிட்டால் அது அமெரிக்காவிற்கு நல்லதல்ல என்கிற எண்ணமும் – அந்த சோம்பேறிகளுக்குப் பணமும் கிடைக்கும் என்கிற எண்ணமும்தான். ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறார்.

அந்த ஐந்து பேரும் கவர்னர் மகனைக் கடத்துகிறார்கள். இறுதியாக என்ன நடக்கிறது என்பது தான் கதை. இந்தக் கதையினூடே மாறுபட்டப் பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு தனி மனிதனும் நேசிக்கப்படவேண்டியவர்களே என்கிற கருத்தினையும் இந்தப் படம் சொல்லுகிறது.

மேலே நீங்கள் பார்க்கும் படம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நட்சத்திரங்களின் படங்கள்தான்.

Opening scene of ‘Future Assasin’ compares to that of James Bond film

Born at Chennai, studied at US, Younis, is in-charge of Saravana Bhavan at USA. Though in hotel industry, his enthusiasm in film pushed him to make a film thereby exhibiting his directorial skill and narration. His film ‘Future Assasin’ can be easily compared to any Hollywood action films. Specifically the opening scene will be much thrilling that of our own Kollywood popular names. The film has received appreciation and awards at Cannes Film Festival and other Film Festivals as well. He is now at Chennai, having a special screening of the film to the media persons where lot of film enthusasist and young film aspirants participated.  Having received overwhelming positive response from the audience, Younis is very happy at the launch of his film career at his birth place.

The story is about 5 lazy people who wanted to do something good for the welfare of the country, but don’t have money to do anything. Their laziness too prevent them to earn money. An old man named Future-man, knowing their good intention, suggested to them to kidnap the son of a President nominee in the coming US Presidential election. The old man thinks by suggesting them the way, he would halt the triumph of President nominee to win the election which is good for the country, and also able to get good money for these 5 young people who wanted to do good for the country. How they make the kidnap and whether they are able to get money from it; whether the old man was able to spoil the chances of the President’s nominee at the elections, form part of the other end of the story. Despite the handicaps these 5 youngsters have, Younis has showed them in good light to be loved.

Read previous post:
ஆனந்த யாழை மீட்டுகிறேன் – 2 ‘பங்காளி வடிவேலும்… பாசக்கார அடியேனும்…’ -தேனி கண்ணன்

நம்முடைய வாழ்க்கையில நமக்கு கிடைக்கனும்னு சில விஷயங்கள் நியமிக்கப்பட்டிருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் நாமே அந்த விஷயத்தை தவிர்த்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் நாம் தவறவிட்ட அந்த விஷயம் வேறு...

Close