நீங்க ரொம்ப வித்தியாசமான ஆளு சார்… -நடிகை மீனாட்சி வைத்த ஐஸ்!

ஏ.வி.எம் புதிய பிள்ளையார் கோவிலில் ‘வில்லங்கம்’ படத்தின் துவக்க விழா நடைபெற்றது. ரெட் ஒன் புரடக்ஷன் சார்பாக இந்த படத்தை சுமதி அண்ணாமலையும், ரா.நா.சரவணனும் தயாரிக்கிறார்கள். படத்தை இயக்குகிறார் ரா.நா.சரவணன். இவர் ஏற்கனவே இயக்கி விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘முகம் நான் அகம் நீ’

வில்லங்கம் படத்தில் ‘புன்னகை பூவே’ படத்தில் அறிமுகமாகி ஆணிவேர், வேலுர் மாவட்டம் போன்ற படங்களில் நடித்த நந்தா ஹீரோவாக நடிக்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் அறிமுகமான மீனாட்சி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார்.

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் அறிமுகமான மீனாட்சி,சின்ன சின்ன இடைவெளிகளுக்கு பிறகு நடித்த கடைசி படம் கரு.பழனியப்பனின் மந்திரப்புன்னகை. அதற்கு பிறகு மும்பைக்கே போய் செட்டில் ஆகிவிட்டார். அவரை தேடிப்பிடித்து தனது வில்லங்கம் படத்தில் நடிக்க வரவழைத்திருக்கிறார் ரா.நா.சரவணன். மும்பையிலிருந்து கிளம்பிய மீனாட்சி இப்படத்தின் போட்டோ ஷுட்டுக்குதான் நேரடியாக வந்து இறங்கினாராம். வரும்போதே மிகவும் கவர்ச்சியான உடையோடு அவர் வந்திறங்க, இங்கே அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உடைகள் எல்லாமே மூடிக் கொள்கிற ரகம். ‘உங்களுக்கு கவர்ச்சியா போஸ் வேணாமா ?’ என்று மீனாட்சி கேட்க, ‘உங்களை ஆபாசமில்லாமல் காட்டப் போகிறேன் என்றாராம் சரவணன். என்னை படத்தில் நடிக்க அழைக்கும்போதே கவர்ச்சியா நடிக்கணும்னு சொல்லிதான் எல்லா டைரக்டரும் கூப்பிடுவாங்க. ஆனால் நீங்க ரொம்ப வித்தியாசமான ஆளா இருக்கீங்களே என்று வியந்தாராம் மீனாட்சி. வில்லங்கம் படத்தில் அவர் முன்பாதியில் உடல் இளைத்தும் பிற்பாதியில் பத்துகிலோ உடம்பை ஏற்றியும் நடிக்கப் போகிறார். மீனாட்சியின் இப்போதைய உடல் எடையை கருத்தில் கொண்ட சரவணன், செகண்ட் ஹாஃப் கதையைதான் முதலில் படம் பிடிக்கிறார். இதற்கப்புறம் பத்து கிலோ உடல் எடையை குறைக்கப் போகிறார் மீனாட்சி.

இதுவரை பனிரெண்டு படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டேன். இந்த கதையை கேட்டதும் இந்த படத்தை விடவே மனசில்லை என்கிறார் நந்தா. அன்றாடம் தினசரிகளில் வரும் உண்மை சம்பவம் ஒன்றை தழுவி இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் ரா.நா.சரவணன்.

Meenakshi will have physical change in Villangam

Meeenakshi was deputed to Kollywood with Karuppusamy Kuthagaikarar could not make it big here so decided to go back to Mumbai. She was last seen in Karu. Pazhaniappan’s Mandhira Punnagai. Now, director R.N. Saravanan has brought her back to his film titled Villangam. When she descended at the sets she was in glam costumes. The director gave her rustic attire for the photo shoot. Surprised she was quoted as saying that the director was a different genre. Villangam is produced by RN Saranvan and Sumathi Annamalai for Red One Productions. Nandha will play the lead while Meenakshi will be his love interest. Meenakshi will have to undergo physical change for the film, as she will be seen slim and slick in the first half and will put up some weight in the second half. Looking at her physique the director may take the first half shoot first, perhaps! Nanda confided that the story was based on a real life incident appeared in the newspaper and has hence taken up the film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஈகோ விமர்சனம்

காதலர்களுக்குள் ‘ஈகோ ’ இருக்கலாம். ஆனால் லவ்வர்சின் முதல் எழுத்தும் ‘ஈ-கோ’வாக இருந்து, அவர்களுக்குள் ஈகோவும் இருந்தால் எப்படியிருக்கும்? அதைதான் லவ் கிரீட்டிங்காக கொடுத்திருக்கிறார் டைரக்டர் சக்திவேல்....

Close