நீண்ண்ண்…ட இடைவெளிக்கு பிறகு ராகவேந்திரர் கோவிலில் ‘ரஜினி தரிசனம்’
ரஜினி எந்த கடவுளை வணங்குகிறாரோ, அந்த கடவுளை வணங்குவது அவரது ரசிகர்களின் வழக்கம். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணியில் இருக்கும் ராகவேந்திரர் கோவிலை யாரும் கவனித்தது கூட இல்லை. அந்த கோவிலுக்கு அடிக்கடி ரஜினி வருகிறார் என்று கேள்விப்பட்டதும், ராகவேந்திரரை பார்க்க கிளம்பிய கூட்டத்தை விட ரஜினியை பார்க்க வந்த கூட்டமே அதிகம். காலப்போக்கில் நமது வரவு கோவிலுக்கும் நிர்வாகத்திற்குமே பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதை உணர்ந்த ரஜினி, நெஞ்சமே கோவில், நினைவே கடவுள் சித்தாந்தப்படி அவரை நெஞ்சுக்குள்ளேயை வைத்து வணங்க ஆரம்பித்துவிட்டார்.
ராகவேந்திரருக்கு முன்பு ரஜினி நாடியது ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை. படங்களில் நடிப்பதை துறந்துவிட்டு இந்த இயக்கத்தோடு ஐக்கியமாகிவிடலாம் என்று இருக்கிறேன் என அவர் பேட்டியளிக்க, கும்பலமாக வேதனைப்பட்ட ரஜினி ரசிகர்கள், ஹரே ராமா இயக்கத்தையே ‘ஓட்றா ராமா’வாக்கினார்கள். அடி தாங்க முடியாத சாமியார்கள் ‘ரஜினி சார்… இங்க வராதீங்க. நீங்க வந்தா நாங்களே ஜுட் என்று கதறிக் கொண்டு போட்டது போட்டபடி ஓடியதெல்லாம் வரலாற்றின் சுவாரஸ்யமான பக்கங்கள்.
பிறகு இமயமலையில் பாபாவை தரிசித்த ரஜினி, அடிக்கடி அங்கு போக துவங்கினார். அவருக்கு மட்டும் வரம் தரும் பாபா நமக்கு கொடுக்க மாட்டாரா என்று அதே பாபா தரிசனத்திற்கு கிளம்பியவர்களில் முக்கியமானவர் சரத்குமார். விஷாலும் அடிக்கடி இமயமலைக்கு போக ஆரம்பித்திருக்கிறார். லேட்டஸ்ட் அப்டேட் இது.
கடந்த வாரத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ரஜினி திருவல்லிக்கேணியிலிருக்கும் ராகவேந்திரர் கோவிலுக்கு சென்றிருக்கிறார். கோவில் நிர்வாகத்தினர் அவரை உற்சாகமாக வரவேற்றிருக்கிறார்கள். அங்கு புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள தங்க தேரை பார்வையிட்ட ரஜினி, மனமுருக ராகவேந்திரரை வணங்கி புறப்பட்டிருக்கிறார். இனி அவர் அடிக்கடி அங்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தரிசனம் யாருக்கும் தொந்திரவு ஏற்படுத்தாமல் அதிகாலை நேரத்தில் நிகழுமாம்…
Rajini seeks solace with Raghavendra
Rajini who was a regular visitor to Raghavendra Swamy temple at Triplicane earlier, discontinued the habit as it posed enormous problems to the temple administration. He then started going to Himalayas to seek the blessings and solace from Baba. Last week he visited Raghavendra Swamy temple at Triplicane around 4.0 a.m. and had offered his prayers. It is learnt that he has decided to make his visit to the temple routine, but would do it in the early hours so as not to be disturbance to others in general and to the temple administration in particular.