நீலப்படம், சிவப்பு விளக்கு, மஞ்சள் பத்திரிகை… கலர்ஃபுல் மனிதர்களுக்காக ஒரு ‘ கலர் ’ படம்!

நீலப்படம், சிவப்பு விளக்கு, மஞ்சள் பத்திரிகை என்று கலர்ஃபுல்லாக திரிவதில் சுகம் காணும் மனிதர்களுக்கு ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ என்றொரு படமும் பிடித்துப் போகலாம். ஏனென்றால் இந்த படம் சிவப்பு விளக்கு சிங்காரிகளை பற்றிய படமாம். ‘அதுக்காக ஆபாசமா எடுத்திருப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க, சமூக சிந்தனையோட இந்த படத்தை எடுத்திருக்கேன்’ என்கிறார் யுரேகா. அடிப்படையில் ஒரு கவிஞர், சமூக சிந்தனையாளர், என்ற பன்முகம் கொண்ட இவர் பாலியல் தொழிலாளி என்பதையே ‘பாலியல் போராளி’ என்றுதான் உச்சரிக்கிறார்.

சுமார் இரண்டு வருடங்கள் இதற்காக பலத்த (?) ஆராய்ச்சியெல்லாம் செய்திருக்கிறாராம் யுரேகா. அவர்களின் தினசரி வருமானத்தில் எத்தனை சதவீதம் லஞ்சமாக போகிறது? எத்தனை சதவீதம் கமிஷனாக போகிறது? எவ்வளவுதான் அவர்களுக்கு மிஞ்சுகிறது? என்பதெல்லாம் இவரது ஆணித்தரமான புள்ளிவிபரங்கள். நான் பாலியல் தொழிலை நியாயப்படுத்தல. அந்த தொழிலுக்கு ஒரு லைசென்ஸ் கொடுங்க என்றுதான் கேட்கிறேன். இப்படி சொல்லும் யுரேகா, இந்த படம் சமுதாயத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கிறார். சமுதாயத்தில் நடைபெறும் பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு இந்த தொழிலை ஒரு தொழிலாக அரசு அனுமதித்தால் போதும் என்பதெல்லாம் கொஞ்சம் டூ மச் ஆகவே தெரிகிறது. ஆனால் படத்தை பார்த்துட்டு பேசுங்க. பார்க்காமல் எந்த விவாதம் செய்தாலும் அது எடுபடாது என்கிறார்.

பரதேசி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் மாதிரியான முக்கியமான படங்களை வாங்கி வெளியிடும் ஜே.எஸ்.கே நிறுவனம், இந்த படத்தை வெளியிடுகிறது. அதுவே எங்களுக்கு கிடைச்ச அங்கீகாரம்னுதான் நினைக்கிறோம். இனி எங்க கருத்து எங்க போய் சேரணுமோ, அங்க போய் சேரும் என்றெல்லாம் நம்பிக்கை தெரிவிக்கிற யுரேகா, சென்னையில் ஈசிஆர் மாதிரி பகுதிகளில் இவங்களுக்குன்னு இடம் ஒதுக்கிக் கொடுத்தா அவங்க பாட்டுக்கு அவங்க தொழிலை செஞ்சுட்டு போறாங்க என்று வக்காலத்து வாங்குவதை பார்த்தால், சொரேர் என்கிறது.

சிங்கப்பூர்ல நகரத்தின் மையப்பகுதியிலே இந்த தொழிலுக்கு இடம் கொடுத்திருக்காங்க. பாங்காங்ல பல இடங்களில் இந்த தொழில் நடக்குது. உலகம் முழுக்க பாலியல் தொழில் கொடி கட்டி பறக்குது. இனி இந்த தொழிலை தடுக்கவே முடியாது. அப்படியிருக்கும் போது அங்கீகாரம் கொடுத்தால் என்ன என்று ஆவேசமாக முழங்கும் இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல வெட்டு குத்துகள் நடக்கும் போல தெரிகிறது.

‘குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது’ என்பது போல ‘குஜிலிகள் தொடர்பு லைஃபை கெடுக்கும். குஜிலிகள் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது’ என்று எச்சரிக்கை போர்டை நட்டு வைத்துவிட்டு தொழிலை நடத்த சொல்வார்கள் போலிருக்கிறது.

எனி வே… இந்த படத்தில் நடிக்கவே அஞ்சிய நடிகைகள் மத்தியில், தைரியமாக நடிக்க முன்வந்த சின்னத்திரை சிங்காரி சான்ட்ராவுக்குதான் பாராட்டுகள் சொல்ல வேண்டும்!

யுரேகா என்றால் கிரேக்க மொழியில் ‘கண்டுபுடிச்சுட்டேன்’ என்று அர்த்தமாம். இந்த யுரேகா சொல்கிற திட்டத்தால், எத்தனை பேரை தொலைத்துவிட்டு தேடப் போகிறோமோ?

Sivappu Enakku Pidikkum will bring out the social issue to the fore!

Eureka, a feminist will be debuting in film direction with the film Sivappu Enakku Pidikkum. Speaking about the film Eureka says that the film will bring out the issues of ‘flesh-trade’ and the sufferings of those who are in the trade. She reels out the statistics of bribe and commission paid to authorities and brokers, and what is left over for the girls who are in it. She says while she is not supporting the ‘trade’, she wants to legalise the trade by the government, as is done in Singapore and many other countries, and that is what she is talking about in the film. The film is distributed by JSK Corporation which she says itself is the acknowledgement of her fight for those who are harassed and swindled by those who have power. While most of the heroines avoided acting in the film, it was Sandra Amy, TV artiste who came forward boldly to act in the film, which needs wholehearted appreciation.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இருக்கறது போதாதுன்னு இது வேறயா?

தமிழ்சினிமாவில் பெரிய தயாரிப்பாளர்கள் ஒரு சிலரை பார்த்து, ‘அவரு செலவு பண்ற பணம் எங்கிருந்து வருது தெரியுமா?’ என்று சென்னைக்கு அருகிலிருக்கும் ஒரு மடத்தை நோக்கி கையை...

Close