நெருக்குகிற டிராபிக்- யூனிட்டின் நிம்மதியை பறித்த ஹன்சிகா? – சென்னையில் சில பரபர நிமிடங்கள்…..

நெருக்குற டிராபிக்குல நிம்மதி பறிபோச்சே என்று ஆளாளுக்கு அலறிக் கொண்டிருக்க, இந்த சென்னை டிராபிக்ல பைக் ஓட்டினாலே ஆச்சு என்று ஒரு முன்னணியிலும் முன்னணி நடிகை பிடிவாதமாக ஆசைப்பட்டால் அந்த ஆசையை எங்கு போய் சொல்வது? கடந்த வாரத்தில் ஒரு நாள் சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் ‘பிரேக் அப்’ ஆகிருச்சாமே என்று உலக உருண்டையையே உருட்டி தள்ளுகிற அளவுக்கு ரசிக மஹா ஜனங்கள் பரபரப்பாகிக் கிடக்க, கூலாக சிரித்துக் கொண்டிருந்தார் ஹன்சிகா. அதேநாளில் நடந்த பிடிவாத கூத்துதான் இது.

மான் கராத்தே படப்பிடிப்பு பெசன்ட் நகரில் நடந்து கொண்டிருந்தது. கதையில் ஹன்சிகா ஒரு வெஸ்பா ஸ்கூட்டரில் வந்து போய் கொண்டிருப்பாராம். அன்றும் படப்பிடிப்பில் அவர் அந்த ஸ்கூட்டரை ஓட்டி நடித்துக் கொண்டிருந்தார். மாலை ஆறு மணிக்கு பேக்கப் ஆகி, ஸ்கூட்டரையும் வேனில் ஏற்ற நினைத்தபோது, இந்த ஸ்கூட்டரிலேயே நான் என் ஓட்டலுக்கு போயிடுறேன். ப்ளீஸ் என்றாராம் ஹன்சிகா. நீங்களே ஓட்டிகிட்டு போகப் போறீங்களா? இதென்ன விபரீதம்? வழியில் தப்பி தவறி ஸ்லிப் ஆச்சுன்னா, உங்களுக்கும் ஆபத்து. எங்க ஷுட்டிங்தானே நிக்கும். ப்ளீஸ். உங்க எண்ணத்தை மாத்திக்கோங்க. கார்ல ஏறுங்க என்று ஹன்சிகாவின் ஆசைக்கு டைரக்டர் வந்து குறுக்கே கட்டையை போட, ‘ம்ஹும், முடியாது… முடியவே முடியாது’ என்று கூறிவிட்டாராம் ஹன்சிகா. எப்படியோ அவரை சமாதானப்படுத்தி பின் சீட்டில் உட்கார வைத்துவிட்டு வேறொருவரை ஓட்ட வைத்தார்களாம்.

அவர் தங்கியிருந்த மவுண்ட் தாஜ் ஓட்டல் வரைக்கும் ஹெல்மெட் கூட போடாமல் தனது அழகான முகத்தை மக்களுக்கு காட்டிக் கொண்டே ஹன்சிகா டிராவல் செய்த காட்சியை பார்க்க வேண்டுமே! அவருக்கு எவ்வித சிக்கலும் வரக்கூடாதென இருபுறமும் இரண்டு பைக்குகள், பின்னாலேயே ஒரு கார் என்று அவரை சேஃப்டியாக கொண்டு சேர்த்தார்களாம்.

ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொண்ணு அழகு. ஹன்சிகாவுக்கு அவரது பிடிவாதம்தான் அழகு!

Hansika rides to her hotel in Vespa schooter!

Hansika who was shooting with Siva Karthikeyan for Maan Karate had a rollicking experience of riding on a Vespa scooter, to her hotel, near Mount, in the busy evening traffic. Surprised? Yes, it is true. She vehemently insisted that she would go back to her hotel room in the Vespa scooter she was riding for the film shoot. Despite the pleas from the director and other crew members, she was adamant. Finally the unit members convinced her and asked her to be a pillion rider, with a someone from the crew drove her back to her hotel, in the scooter, in the busy evening traffic snarls. She was accompanied by 2 pilots in bikes and a safety-watch car following them. How many would have enjoyed watching Hansika on the pillion, we don’t know, but she had the guts to do it.

Ps: Has she listened to Ajith’s advice for a safe ride with helmet, at least?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத்தின் வீரம் பட டீசர்…

http://www.youtube.com/watch?v=UHtW-jT--zw

Close