நேர்ல மகமாயி… படத்துல மிட்டாயி… நடிகையின் எக்குதப்பு போஸ்!

நாலு பாட்டு, மூணு ஃபைட்டு, ஒரு ரேப் சீன் இருந்தா அதுதான் கமர்ஷியல் படத்தின் ஃபார்முலா என்று கருதி வந்த தமிழ்சினிமா, மெல்ல மெல்ல கங்கையில் குளித்து காவேரியில் தலை துவட்டிக் கொண்டிருக்கிறது. இதில் ஏதோவொரு நல்ல கருத்தோடு வருகிற படங்களுக்கு சவப்பெட்டி செய்வதை தொழிலாக கொண்டிருக்கிறார்கள் சில ‘போட்டுக் கொடுக்கும்’ புண்ணியவான்கள். அப்படிதான் அரசுக்கும் அங்குசத்துக்கும் நடுவே பிரச்சனையை கிளப்பி குளிர் காய்கிறது ஒரு கோஷ்டி. ஆனால் இந்த படத்தில் முதல்வரை ஒரு பிரதமர் ரேஞ்சுக்கு உயர்த்திதான் காட்டியிருக்கிறேன் என்று ஆணித்தரமாக கூறுகிறார் அப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான மனு கண்ணன்.

சமீபத்தில் பிரஸ்சை சந்தித்த மனு கண்ணன், தனது மானசீக மனுவை பிரஸ் முன் ஒப்பித்தார்.

இந்தப்படம் RTI எனப்படும் தகவல் உரிமைச்சட்டம்( RIGHT TO INFORMATION ) பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சரியான படம். இதற்காக பல தடைகளை எதிர் கொண்டு வருகிறேன். அதை எல்லாம் அவஸ்தையாகக் கருதவில்லை. இது ஒரு நியாயமானபடம். இந்த தகவல் உரிமைச்சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தேவையான சட்டம். ஆனால் மக்கள் அதுபற்றிய விழிப்பில்லாமல் இருக்கின்றனர். மக்களால் வாக்களித்து அமர வைக்கப் படுகிற சட்டமன்ற உறுப்பினராகட்டும் , பாராளுமன்ற உறுப்பினராகட்டும் அரசாகட்டும், அமைப்பாகட்டும் எதுவாகவும் இருக்கலாம். இந்த அமைப்பில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. நம்நாட்டில் ரேஷன் கார்டு, ஜாதிச் சான்றிதழ் வாங்குவதற்குக் கூட கையூட்டு தரவேண்டியுள்ளது. இன்றே இந்தச் சூழல் இருந்தால் வருங்கால சமுதாயம் என்ன செய்யும்?

1759ல் ஆங்கிலேயன் இங்கு வந்த போது அவனுக்குச் சொந்த நிலம் என்று எதுவுமே இல்லை. ஆனால் நாட்டைப் பிடித்து சுமார் 300 ஆண்டுகள் ஆண்டான். நாமும் அடிமைகளாய்க் கிடந்தோம். ஆனால் நம் ஆங்கில மோகம் இன்று அதிகமாகி விட்டது. தமிழில் பேசினால் புரியாது. தமிழில் பேசினால் சிரிக்கிறார்கள்.என்ன கொடுமை சார் இது என்று தான் சொல்ல வேண்டும்.

நான் லண்டனில் பேசிய போது இந்தப்படம் பற்றி விசாரித்தார்கள். எம்.டெக். எம்.பி.ஏ படித்த உங்களுக்கு இதெல்லாம் தேவையா என்கிறார்கள். என்னைக் கேட்டால் நிச்சயம் தேவைதான். இதையும் செய்யவில்லை என்றால் அது மக்களுக்குச் செய்யும் துரோகம். சமூகப் போராளிகள் எல்லாம் இந்தச் சட்டத்தை இரண்டாவது சுதந்திரம் என்கிறார்கள். இந்தச் சட்டத்தில் உள்ள பிரச்சினையை சரிசெய்ய வருகிற ‘ரைட் டு சர்வீஸ் ஆக்ட்’ பற்றியும் படமெடுப்பேன். பயந்து பின்வாங்கி ஓடமாட்டேன்.

மக்களுக்காகப் படமெடுத்தால் மான நஷ்ட வழக்கு போடுகிறார்கள். முதல்வர் பெயருக்கு களங்கம் செய்ததாகஎன் மீது போடப்பட்டுள்ள வழக்கு போலியானது. அது தவறான வழக்குப் பதிவாகும்.. ஒன்று மட்டும் புரிகிறது அரசு வழக்கறிஞருக்குத் தமிழ் தெரியவில்லை. படம் பார்த்தவர்கள் சொன்னது என்ன தெரியுமா? ‘ஒரு முதல்வரை பிரதமர் அளவுக்கு உயர்த்திக் காட்டியிருக்கிறீர்கள். அப்படியிருந்தும் உங்களுக்கு சங்கடமா?’ என்று கேட்டார்கள்.

நான் முதல்வர் பற்றி படத்தில் உயர்வாகத்தான் காட்டியுள்ளேன். தவறாக எதையும் சொல்லவில்லை. இதை 20 முறை படம் பார்த்த பலரும் தமிழக அரசின் படங்களுக்கான தேர்வுக்குழுவிலுள்ள சங்கர் கணேஷ் உள்பட அனைவரும் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். மக்களிடம் எந்த நல்ல விஷயத்தையும் கொண்டு சேர்ப்பவை ஊடகங்கள்தான். இந்தப்படம் மக்கள்படம். இதைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களிடம்தான் உள்ளது

என் மனைவி நான் சினிமா டைரக்டர் ஆனதற்குத் திட்டுகிறார்’இன்ஜினியராக இருந்தீர்கள் பெருமையாக இருந்தது. மேனேஜராக இருந்தீர்கள் பெருமையாக இருந்தது. டைரக்டர் என்பது கேவலமாக இருக்கிறது.’என்று திட்டுகிறார். இந்தப் படம் வெற்றியோ தோல்வியோ, நான் கவலைப்பட மாட்டேன். மீண்டும் வெளிநாடு செல்வேன். சம்பாதித்து மறுபடியும் வந்து மக்கள் படம் எடுப்பேன். “இவ்வாறு இயக்குநர் மனுக் கண்ணன் பேசினார்.

பின்குறிப்பு – நிகழ்ச்சிக்கு இழுத்து போர்த்திக் கொண்டு வந்த ஹீரோயின் ஜெய் குஹாவின் ஸ்டில்தான் நீங்கள் அருகில் பார்ப்பது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜெய் குஹாவுக்கு ஒரு கேள்வி. ஏன் நீங்க இதே கோலத்தோடு நிகழ்ச்சிக்கு வரல?

Director Manu Kannan decries opposition for Angusam

Director Manu Kannan met the press to elaborate and put forth his views on his film Angusam. Angusam is the film revolves around the latest act brought out by Govt of India, viz. Right to Information Act. However, a group with political affiliation is voicing its protest against the film saying the film degrades the Chief Minister.

Speaking about the film, director Manu says, many in the society are not aware of the act and those who are in the know of the act do not know how to use it. He felt it is the second freedom after the freedom we got through struggle by our leaders. While the civil society and those who have seen the film appreciated some unknown group is raising the volte of protest without knowing the details of the film, he lamented. “In fact he has elevated the Chief Minister to the level of Prime Minister in the film” he argued.

Director Manu has been taken to court by the same group saying the post of Chief Minister has been degraded. And he has been vilified for doing this. With disappointment writ at large in his face he said that his wife too is pressurising him to discontinue the director profession and concentrate on his engineering background due to which he worked abroad and earned handsomely. He expressed his hope through social networking sites he would take the film to the people to make known of what he wanted to convey to the people.

He exuded confidence when he said that he would not be bowed down by pressure and would go back to his profession and earn handsomely at abroad and return back to take another film on ‘Right to Service Act’.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அன்றே சொன்னோம்… அதுதான் நடந்தது!

கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குனர் பாலா இசைஞானி இளையராஜாவை சந்தித்தார் என்றும், பாலாவின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் மாற்றப்பட்டிருக்கிறார் என்றும் ஒரு செய்தியை...

Close