படத்தப்பற்றி சொல்லுங்கன்னா….? தலை சுற்ற வைக்கிறார் விதார்த்!

படத்தப்பத்தி சொல்லுங்கன்னு கேட்டா அருத்தாபத்தின்னுதான் ஆரம்பிக்கிறார் விதார்த். என்னடா இது என்று தலை கிர்ரடிக்க கவனித்தால் நிஜமாகவே ஆச்சர்யம்தான்.

கொஞ்ச காலமாகவே கோடம்பாக்கத்தில் எந்த குழாயை திறந்தாலும் தமிழ் பால் கொட்டுகிறது. மீகாமன், கடவன் என்றெல்லாம் படத்திற்கு அக்மார்க் தமிழில் பெயர் வைக்கிறார்கள். அந்த வரிசையில்தான் இந்த ‘அருத்தாபத்தி’. அப்படீன்னா? யாராவது தமிழ் வாத்தியார் கிடைச்சா சந்தேகத்தை தீர்த்துக்கலாம் என்று தேட துவங்கும்போதே, மடக்கி விளக்கம் சொல்கிறார் இப்படத்தின் ஹீஅரா விதார்த். சொன்ன ஒரு சொல்லில் இருந்து சொல்லாத ஒன்றையும் அறிந்து கொள்வதுதானாம் இந்த சொல்லுக்கு அர்த்தம். படத்தின் கதைக்கும் இந்த தலைப்புக்கும் ரொம்பவே நெருக்கம் இருப்பதாக கூறுகிறார் இயக்குனர் சாஜன் வர்கீஸ். இவர் பிரபல மலையாள இயக்குனர் வினயனிடம் பணியாற்றியவர்.

இப்படியொரு கதையை உருவாக்கும்போதே இவரது மனக்கண்ணில் பளிச்சென சிக்கியவர் விதார்த். அதற்கப்புறம் இந்த படத்தில் யார் யாரெல்லாம் இருந்தால் படம் ஹிட்டடிக்கும் என்று ஐடியா சொல்வது வரைக்கும் பொறுப்பை தலையில் சுமந்து கொண்டாராம் ஹீரோ. அந்தளவுக்கு இந்த படம் தனது லைஃபில் ஷியூர் ஹிட் அடிக்கும் என்று நம்பியதுதான் காரணம். ஹீரோயினாக கேரளவை சேர்ந்த ஐஸ்வர்யா தத் என்பவர் நடிக்கிறார். அப்படியே பெரிய மனசுடன் இன்னொரு ஹீரோவுக்கும் இடம் கொடுத்திருக்கிறார் விதார்த்.

கேரளாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் சகோதரி மகன் ஹிரோஷ்தான் அவர். பொதுவாகவே ஒரு ஹீரோ நடிக்கும் படத்தில் இன்னொரு ஹீரோ இருந்தால் நம்ப பொழப்புல கைய வச்சுரப் போறங்களோ என்கிற அச்சம் வரும். அந்த அச்சமெல்லாம் சுத்தமாக இல்லையாம் விதார்த்துக்கு. ஏனென்றால் என் கேரக்டரை இந்த கதை நேர்மை செய்யும். அது சரியாக அமைந்தால் போதும் என்கிறார் நம்பிக்கையோடு.

டைரக்டரையும் கதையையும் நம்புற ஹீரோவை ரெண்டுமே கைவிடுவதில்லை. வெல்லுங்கள் விதார்த்!

Vidharth to play lead in Aruthapathi

Vidharth who had a successful outing in Vishal’s Pandia Nadu will be playing the lead in a film titled Aruthapathi. He explained Aruthapathi means to make one understand that which have not been told explicitly. He continues the film has a close link with the relevance of the meaning of Aurthapathi. The film will be directed by Sajan Varghese, who earlier worked as assistant to Malayalam director Vinayan. Vidharth is confident that this film will be a milestone in his career. Hirosh Mommotty’s nephew will play another lead in the film. Vidharth exuded confidence saying that he need not worry about 2nd hero taking away his prominence in the film, as his character is etched well in the film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் பாடல் வெளியீட்டு விழா படங்கள்

[nggallery id=102]

Close