படப்பிடிப்பில் பாதியில் ஓடிய நடிகை! நாங்க எந்த வம்பும் கூட பண்ணலையே? டைரக்டர் கவலை!

ஓடிப்போகிற நடிகைகளை, தேடிப் போய் கெஞ்சுகிற டைரக்டர்கள் இருக்கிற வரைக்கும் ஒட்டமும் இருக்கும். நடிகைகளின் ஆட்டமும் குறையாது. ஆனால் டைரக்டர் பாலு ஆனந்த் அது கெடக்கு போ என்கிற டோன்ட் கேர் மனப்பான்மைக்கு வந்ததால், ஒரு படம் டென்ஷன் இல்லாமல் வளர்ந்து ரிலீசுக்கும் தயாராக நிற்கிறது. சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க அழைக்கப்பட்டவர் காவலன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மித்ரா குரியன். அதற்கப்புறம் ஒரு சில படங்களில் தலையை காட்டினாலும் ஒரு சந்தோஷத்தை தரவில்லை அப்படங்கள் அவருக்கும், ரசிகர்களுக்கும்.

அதற்கப்புறமும் போனால் போகிறதென்று இவரை ஹீரோயினாக நடிக்க வைத்து ஒரு படத்தை துவங்கினார் டைரக்டர் பாலு ஆனந்த். இதுவரைக்கும் சுமார் பதினைந்து படங்களை இயக்கியும் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார் இவர். இருக்கேவா? என்கிற மாதிரி மித்ரா குரியன் நடந்து கொண்டதுதான் வியப்பு. ஊட்டியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாம். திடீரென ஒருநாள் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்ற மித்ரா, அன்றிரவே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டார் கேரளாவுக்கு. இந்த விஷயம் மறுநாள் வரைக்கும் தெரியாத இயக்குனர் ஷாட் வைத்துவிட்டு காத்திருக்க, அந்த எஸ்கேப் நியூசை வருத்தத்தோடு காதில் ஓதினார்களாம் தயாரிப்பு நிர்வாகிகள்.

அட… பத்து பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி மாதிரி, ‘அப்படிப்பட்ட(?)’ டார்ச்சர் கூட யாரும் கொடுக்கலையேப்பா? பிறகு ஏன்ன்ன்ன் என்று கவலைப்பட்ட பாலு ஆனந்த், உடனடியாக யுதாஷா என்ற நடிகையை அழைத்து வந்து படப்பிடிப்பை தொடர்ந்துவிட்டார். முழு படமும் முடிந்து ரிலீசுக்கே தயாராகிவிட்டார்கள்.

இந்த படத்தோட ஹிட் மித்ராவுக்கு சரியான பாடமாக இருக்கும் என்கிறார்கள் யூனிட்டில். ஒரு நடிகையை கட்டி மேய்ப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை போலிருக்கே?

Director Balu Anand completes his film with another heroine

Director Balu Anand was making his film Santhithathum Sindhithathum with Mitra Kurien in the lead and the shoot was progressing well. Mitra who acted in a cameo as Vijay’s pair in Kavalan, has done few films in Tamil. During the midst of shooting Mitra packed off to Kerala without informing any one including the director. However Balu Anand was least perturbed, and cast Yudhasha as the lead and completed the film. Sources from the unit say it will be a lesson not only for Mitra but also for other actresses as well who play hide and seek, at the drop of a hat.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இளைய தளபதியா? அப்படி யாரையும் தெரியாது -விஜய்யின் தம்பி விக்ராந்த் கொந்தளிப்பு

பாண்டியநாடு படத்தின் சக்சஸ் மீட்! விஷால், லட்சுமிமேனன், இயக்குனர் சுசீந்திரன், விக்ராந்த் உள்ளிட்டவர்களுடன் படத்தில் விஷாலுக்கு அப்பாவாக நடித்திருந்த பாரதிராஜாவும் வந்து சேர, களைகட்டியது ஏரியா. லவ்,...

Close