படம் எடுக்க வர்றவங்களை ஒழிச்சு கட்டுறதுதான் வேலை

ஓப்பனாக போட்டு உடைப்பது என்றால் அது இதுதான் போலிருக்கிறது. ‘வெளிநாட்ல இருந்து படம் எடுக்க வர்றவங்க ஏதோ ஞாபகத்துல வர்றாங்க. ஸ்டார் ஓட்டல்ல ரூம் போட்டு ஸோ அண் ஸோ பண்றாங்க. பிறகு படத்தை எப்படியெப்படியோ எடுத்து, ஊர்லேந்து கொண்டு வந்த காசையெல்லாம் விட்டு தொலைச்சுட்டு திரும்பி போயிடுறாங்க’ என்று அப்பட்டமாக போட்டு உடைத்தார் ஒய்.ஜி.மகேந்திரன். உடைத்த இடம் ‘இருக்கு ஆனா இல்ல’ படத்தின் பிரஸ்மீட்.

ஃபாரின்லேர்ந்து யாராவது படம் எடுக்க வந்தா அவங்களை ஒழிச்சு கட்டிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பாங்க என்று அதே விழாவில் படத்தயாரிப்பில் பேரூதவி செய்திருக்கும் கலைமணி என்பவரும் பேச…. தப்பு பணத்தை எடுத்துகிட்டு படம் எடுக்க வந்தவங்க மீதா? இல்ல இங்கிருக்கிறவங்க மீதா? என்கிற பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆக மொத்தம் பாதி பேர் படம் எடுக்க வர்றதில்ல என்பது மட்டும் சுலபத்தில் புரிய, இந்த படத்தை எடுக்க வந்த குவைத் பார்ட்டிகளான நால்வரும் ஒருவித நம்பிக்கையுடன் உட்கார்ந்திருந்தார்கள் மேடையில். ஏனென்றால் இவர்கள் படம் எடுக்க வந்ததே நாம ஜெயிக்கணும் என்கிற ஒரே நோக்கத்தில்தான். அது தெளிவாகவே புரிந்தது அவரவர்களின் பேச்சில்.

பேய் இருக்கா இல்லையா என்பதுதான் படத்தின் சப்ஜெக்டாக இருக்க வேண்டும். ட்ரெய்லரில் அது அப்பட்டமாக புரிந்தது. ஒரு த்ரில்லர் படத்திற்கு என்னெல்லாம் தேவையோ? அத்தனையும் இந்த படத்தில் இருப்பதை போல இருந்ததால் இன்னும் சற்று நேரம் அவர்களின் அரட்டையை கேட்கலாம் என்ற நோக்கத்தில் இடையில் புகுந்து கேள்வி கேட்காமல் நிறைய பேச விட்டார்கள் நிருபர்கள். படத்தில் காமெடி பண்ணியிருக்கிறார் சின்னத்திரை புகழ் ஆதவன். முதலில் விவேக், சூரி, வடிவேலு என்று யார் யாரையோ நினைத்து கடைசியில் இவரே பெட்டர் என்று முடிவெடுத்தார்களாம்.

ஹீரோ விவன்த் ராத்திரி பத்து மணிக்கு மேல் வானொலியில் கதை சொல்கிற ஆர்ஜே. நிறைய காதல் கதைகளை கொட்டாவி வருகிற அளவுக்கு சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் படத்தில் பிரித்து மேய்ந்திருக்கிறார் என்பது ட்ரெய்லரில் புரிந்தது. படத்தில் இரண்டு ஜோடி. கொஞ்சம் கெடுபிடியான யூனிட்டல்லவா? ஆடியோ விழாவில், ‘சார் கொஞ்சம் போஸ் ப்ளீஸ்’ என்று போட்டோகிராபர்கள் கேட்க, பாய்ந்து இழுத்து பக்கத்தில் நிறுத்திக் கொண்டார் இரண்டு ஹீரோயின்களையும். ஏதோ இந்தளவுக்காவது இப்போ முடிஞ்சுதே என்கிற ஆறுதல் தெரிந்தது அவரது அழகான முகத்தில்!

Illa Ana Irukku press meet

The press meet of Illa Ana Irukku was held today with cast and crew in attendance. YG Mahendra who was the special invitee was blunt when he said that those who come from abroad for producing film, returns empty handed after spending their money for purposes other than producing films. While Kalaimani who was the executive producer for the film was worried about the lack of support and help for those who come from abroad for producing films, contradicting Mahendra’s version.

However the four-some producers of Illa Ana Irukku are a determined lot which could be seen from their speech narrating their efforts put in for producing the film. The film seems to have all aspects for a thriller film, going by the trailer screen during the meet.

RJ Vivanth will be playing the hero in the film that will have two heroines in the film. TV artist Aadhavan will debut as comedian in big screen with this film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
குடைச்சல் கொடுத்த தம்பிக்கு தேவயானி தந்த மன்னிப்பு

ஃபெப்ஸி குண்டர்கள் புகுந்து குழப்பியதால் பிரசாத் லேப் உள்ளே நடந்த ‘ஆதியும் அந்தமும்’ பாடல் வெளியீட்டு விழா பற்றி எழுதமுடியாமல் வேறு ஏதேதோ எழுத வேண்டிய நிலைக்கு...

Close