படிப்பு முடிஞ்சு ஷாம்லி வந்தாச்சு… -அத்தான் அஜீத் சொன்னா சினிமாதான்!
நல்ல நல்ல நடிகைகளையெல்லாம் கல்யாணம் ‘கட்டிக் கொண்டு’ போய்விடுகிறது. ஜோதிகா, ஷாலினி என்று இவர்கள் வாழ்க்கை பட்ட இடம் வசந்தகாலப் பூக்களாக இருந்தாலும், சினிமாவில் இவர்களது வெற்றிடத்தை நிரப்ப, ஒரு மயிலும் இல்லை. மானும் இல்லை.
அக்கா அளவுக்கு இல்லையென்றாலும் ஷாலினி தங்கை ஷாம்லிக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்றே நம்பினார்கள் சினிமாவுலகத்தில். ஆனால் அவர் தெலுங்கில் நடித்த படம் எதுவும் ஒடிய மாதிரி தெரியவில்லை. தமிழும் பெரிசாக ஷாம்லி விஷயத்தில் அக்கறை காட்டவில்லை. சரி, படிக்கப் போகலாம் என்று வெளிநாட்டுக்கு கிளம்பிவிட்டார்.
நடுவில் பலரும் அவரை மறந்தே போனார்கள். இந்த நிலையில் படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டாராம். பூக்கடை தெருவில் பொழுதெல்லாம் வாசம் என்பது போல, இவர் வந்ததை வெகு சீக்கிரமே தெரிந்து கொண்டார்களாம் சினிமா மேனேஜர்கள். திரும்பவும் நடிக்கலாமே என்று கல்லை கரைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அத்தானாகிய அஜீத் நடிப்பதற்கு ‘யெஸ்’ சொன்னால் போச்சு. இல்லேன்னா உள்ளதும் போச்சு… ஷாம்லீஈஈஈஈஈஈ…