படுகோனே பற்றி படு கோணல் நியூஸ்?

தமிழ்சினிமா ஊடகங்களில் கடந்த சில தினங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி ஒன்று ஆறறிவையும் மழுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த செய்தியின் வேகம் கண்டு தீபிகா படுகோனே கூட திகைத்துப் போயிருப்பார். ஏனென்றால் இந்த செய்தியில் சக்கையாக பிழியப்படுகிறவர் அவரே. வேறொன்றுமில்லை, அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை நகைச்சுவை பட இயக்குனர் சிம்புதேவன்தான் இயக்கப் போகிறாராம். கதை சுருக்கம் சொல்லி, அதற்கப்புறம் கதை விரிவாக்கம் சொல்லி, ஒருவழியாக விஜய் வைத்த எல்லா தேர்விலும் வெற்றி பெற்று இறுதிகட்டத்தை எட்டிவிட்டார் சிம்புதேவன்.

இப்போதைக்கு தனக்கு தேவை ஒரு நகைச்சுவை படம் என்கிற முடிவுக்கு விஜய் வந்திருப்பதும் நல்ல விஷயம். இந்த படத்தில் தீபிகா படுகோனேவை நடிக்க வைத்தால் விஜய் சந்தோஷப்படுவாரே என்பதுதான் சிம்புதேவனின் திட்டமாம். வண்டி இதுவரைக்கும் நன்றாகதான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் தீபிகா படுகோனேவுடன் பேசியதாகவும், நாள் ஒன்றுக்கு அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் செய்திகள் எழுதப்பட்டு வருகின்றன.

இங்குதான் சிந்திக்க தெரிந்த சிலருக்கு சந்தேகமே வருகிறது. அதுவும் தமிழ்சினிமா நடிகர்கள் மட்டுமல்ல, இந்திய சினிமாவை சேர்ந்த அத்தனை நடிகர்கள் பற்றியும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் சிலருக்கு மேற்படி செய்தி, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிற ரகம். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ என்றால் அது ரஜினிதான் என்கிறது ஒரு புள்ளிவிபரம். தனது சம்பளமாக சுமார் 37 கோடிகளும் படத்தின் லாபத்தில் ஒரு பங்கு என்று கணக்கு போட்டும் வாங்குகிறாராம். அப்படி கணக்கெடுத்தால் சுமார் அறுபது கோடியில் வந்து நிற்கிறது அவரது சம்பளம்.

இவருக்கு பிறகு வரும் இந்தி நடிகர்களான அக்ஷய் குமார், சல்மான்கான்களுக்கெல்லாம் கூட சம்பளம் முப்பதிலிருந்து நாற்பது கோடி வரைதான். பொதுவாக ஹீரோக்களின் சம்பளத்தை கணக்கிட்டால் அதில் பாதி கூட வாங்குவதில்லை எந்த ஹீரோயினும். உண்மை அப்படியிருக்கும்போது தீபிகா படுகோனே தினந்தோறும் ஒரு கோடி சம்பளம் கேட்டார் என்று வெளியே பரப்பிவிட்ட புண்ணியவான் எங்கே என்று தேடி கண்டுபிடித்து எங்காவது ஒரு தெருக் கோடியில்தான் உட்கார வைக்க வேண்டும்.

இவர்கள் சொல்வது போல அது சரியான தகவல் என்று வைத்துக் கொண்டாலும், ஒரு ஹீரோயின் படத்தில் எத்தனை நாட்கள் நடிக்க வேண்டி வரும் என்பதும், அப்படி கொடுத்து நடிக்க வைக்கப்படும் படங்களின் பட்ஜெட் எங்கே போய் முடியும் என்பதையும் கணக்கில் கொண்டால், அதிர்ச்சிதான் மிஞ்சும்.

சம்பந்தப்பட்ட படத்தை ரிலீஸ் பண்ண சந்திர மண்டலத்தில் தியேட்டர் போட்டால் கூட வருகிற கலெக்ஷனில் படத்தின் செலவை ஈடு கட்ட முடியாது. புரிஞ்சு எழுதுங்கப்பா…

The salary demand of Deepika Padukone looks illogical?

Few days ago there were reports saying that director Chimbudevan who will be directing Vijay’s next film after AR Murugadoss’s film, had contacted Deepika Padukone to cast in the film opposite to Vijay, and that her salary demand was so huge that he had dropped the idea of casting her in the film. The reports also suggested that Deepika was very interested to do the full length Tamil film, and ready to allot dates for the film.

While it is to be noted that a heroine has to shoot for about 30-40 days maximum in a film which means she would be paid a salary of Rs.30-40 crores as her salary. But in reality Shah Rukh and Salman Khans themselves take home Rs.40-45 crores as salary and how could Deepika could demand such a salary.

It is either, ‘sour grapes’ story neatly twisted and leaked, or has the person who invented the story not worked out his ‘logics ’rightly.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தேவதையின் இரவுப்பாட்டு உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை – 6 முருகன் மந்திரம்

என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இளையராசாவின் இசையால் அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் கார்த்திக், ராமராஜன், மோகன்… இந்த 3 பேருமாகத்தான் இருக்கும். ஒரு பக்கம் “இந்த மானும் சொந்த...

Close