படுத்துகிட்டே பேசலாம் வாங்க! – அட… இவங்கள்லாம் கலைஞர்கள்தானா?

‘நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சொன்னாலும் சொன்னார். அப்போதிலிருந்தே இந்த ‘படுத்துக்கொண்டே…’ கான்சப்டை விடாமல் பிடித்துக் கொண்டது கோடம்பாக்கம். ‘எங்க தியேட்டருக்கு வாங்க. படுத்துகிட்டே படம் பார்க்கலாம்’ என்று அறிவித்தார் அபிராமி தியேட்டர் அதிபர் ராமநாதன். அவர் அறிவித்து ஒரு வாரம் கழித்து வேறொரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பீரங்கி பேச்சாளர் தங்கர்பச்சான், ஏற்கனவே சினிமா கேடு கெட்டுக் கிடக்கு. இதுல படுத்துகிட்டே படம் பார்க்கலாம்னு கூப்பிட்டா வௌங்குமா? என்று கடுப்படித்ததுடன் வேறு பல அச்சில் ஏற்ற முடியாத உதாரணங்களையும் குறிப்பிட, அந்த விழாவே அப்செட் ஆனதெல்லாம் யாராலும் மறக்க முடியாத நிகழ்வுகள்.

அதற்கப்புறம் சில காலம் இந்த ‘படுத்துக் கொண்டே…’ கான்சப்டை மறந்திருந்தது கோடம்பாக்கம். அதை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறார்கள் ஒரு டப்பிங் தியேட்டர்காரர்கள். தி.நகர் அருகே துவங்கப்பட்டிருக்கும் இந்த தியேட்டரில் ஸ்பெஷலாக ஒரு டப்பிங் தியேட்டரை வடிவமைத்திருக்கிறார்களாம். இங்கு படுத்துக் கொண்டே டப்பிங் பேசலாமாம். ரொம்ப போரடிச்சா நடந்துகிட்டே பேசலாம். ட்ரெட் மில்லில் ஏறி ஓடிகிட்டே பேசலாம் என்று ஏகப்பட்ட …லாம்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

பேசும்போது சரியாக எச்சில் வராமல் உதடுகள் வறண்டால் கூட, லிப் சவுண்ட் வருகிறது என்று லேசாக தண்ணீர் எடுத்து உதட்டில் தடவிக் கொண்டு பேச வைப்பார்கள் சில டப்பிங் தியேட்டர்களில். இங்கோ நடந்துகிட்டே பேசலாம். ஊர்ந்துகிட்டே பேசலாம். படுத்துகிட்டே பேசலாம். வேணும்னா எதையாவது தின்னுகிட்டே கூட பேசிட்டு போங்க என்று சுதந்திரம் கொடுக்கிறார்கள்.

இவங்களையெல்லாம் தங்கர்பச்சானை விட்டுதான் சோதிக்கணும்…!

Technology is more for perfection than for comforts!

There are theatres who have seating arrangements in reclined position so that it would add comfort to the back. It is done for the benefit of the audience who have to sit for an hour or so in sitting position. Those theatres that draw elite audience have this facility more to add up their revenue than on the comfort level of the audience.

However for those who are part of film making are being attracted with more such comforts now which will do more harm than they do good. Recently a dubbing theatre opened near T.Nagar, Chennai, has announced that they have the dubbing facility where one can dub in whichever way they want to dub it, viz., in reclining mode, in walking mode, on treadmill, and what not? Well, the technology has provided these comforts can be made use of. However our concern is that when a dubbing is done, the dubbing artiste has to live the emotions of the main artiste of the film, through her dubbing voice, which will of course go astray due to change in voice/tone, when dubbing is done while walking, or lying on bed, or on a treadmill? The end result will only lead to taking the critics’ aggressive comments on the dubbing artistes and a lower rating. Technology gives scope for improvement, cost reduction, and more for perfection. But to misuse it only will draw the ire of the audience and critics alike? Please use the technology to reduce the cost and not vice versa!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இப்ப இதுதான் சென்னை தியேட்டரில்… (15/11/13)

           

Close