பத்திரிகையில் வந்த செய்தி… -நடிகை சமந்தா அப்செட்!
குடும்ப குத்துவிளக்குகள் என்று கொஞ்சம் பேரை மனதில் வைத்திருப்பார்கள் ரசிகர்கள். அவர்களை பற்றி விரும்ப தகாத செய்திகள் வந்தால், அவ்வளவுதான்… நேரடியாக சம்பந்தப்பட்ட நடிகை வீட்டுக்கே படையெடுக்கிற வழக்கமும் இருக்கிறது இந்த வெறியர்களுக்கு.
அப்படி ஒரு கூட்டம் வீட்டுக்கே வந்து, ‘இப்படி பண்ணிட்டீங்களே, நாங்க உங்க மேல எவ்வளவு மரியாதை வச்சோம்’ என்று கதறினால் என்னாகும்? எல்லோரை போலவே சமந்தாவும் அப்செட்! ‘நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. நான் அப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன்’ என்று கூறிய பிறகுதான் சமாதானம் ஆனார்களாம். அவ்வளவு சீரியசான பிரச்சனையாக இவர்கள் கருதியது எது?
சமந்தா நீச்சல் உடையில் நடிக்கப் போவதாக ஒரு தெலுங்கு பத்திரிகை எழுதப்போக அதனால் வந்த கொந்தளிப்புதான் இது. ‘என்னது… நீங்க அப்படி நடிக்கலையா? இதோ தீக்குளிக்கப் போறேன்’ என்று வேறொரு கூட்டம் கிளம்பி வந்தாலும் ஆச்சர்யமில்லை. ஏன்னா ஆந்திராவுலதான் கன்னங்கரேல் ‘கடப்பா’ மனங்களும் இருக்கு. பச்சை பசேல் ‘பஞ்சாரா ஹில்ஸ்’ மனங்களும் இருக்கு!