பத்துகோடிய திருப்பிக் கொடுங்க… – விஜய்யை நெருக்கும் தயாரிப்பாளர்

‘அது வேற வாய், இது நாற வாய்’ என்றொரு டயலாக்கை இந்த நாட்டுக்கு அர்ப்பணித்தவர் வடிவேலாக இருந்தாலும், அதை அதிகம் யூஸ் பண்ணப் போவது விஜய் ரசிகர்களாகதான் இருக்கப் போகிறது. இன்னும் சில தினங்களில் இந்த பிரச்சனை காட்டுத்தனமாக வெடிக்கக் கூடும். அல்லது காதும் காதும் வைத்தாற் போல அமுக்கப்படும். பட்… விஷயம் ரொம்ப சீரியஸ்.

விஜய் சார் கால்ஷீட் கொடுத்து என்னோட வாழ்க்கையையே ஒளிமயமாக்கிட்டார் என்று ‘தலைவா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உருகி ஆறாக ஓடினார் அப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின். அதற்கப்புறம் இந்த படம் வெளியாகும் நேரத்தில் நடந்த திருவிளையாடலைதான் நாடே பார்த்ததே! தற்போது இந்த படத்தால் தனக்கு பத்து கோடி நஷ்டம் என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறாராம் அவர்.

‘அரசியல் அது இதுன்னு நீங்க பேசாட்டின்னா லம்ப்பா எனக்கு இருபது கோடி லாபம் கிடைச்சுருக்கும். இப்போ லாபமும் போய் பத்து கோடி நஷ்டமும் வந்துருச்சே ’ என்பதுதான் பைனான்ஸ் சேட்டோட பர்பாமென்சாக இருக்கிறது! விஜய்யிடம் பத்து கோடியை வசூலித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க அவர் தயாராகி வருவதாக கோலிவுட் பட்சிகள் ரகசிய தகவலை கசிய விடுகின்றன.

பந்து எவ்வளவு வேகத்துல வருதோ, அவ்வளவு வேகத்துல மட்டையால அடிக்கிற வித்தை விஜய்க்கு தெரிந்திருந்தால், இந்த புகார் பந்தை அடித்து நொறுக்கட்டும். இல்லையேல் பத்து கோடி புரட்டிக் கொடுக்கட்டும். சேட்டாச்சு, அவராச்சு.

Thalaivaa producers pointing accusing finger at Vijay

Chandraprakash Jain was eloquent and was all of praises for Ilayathalapathi Vijay when he was doing his film Thalaivaa. However all the words that he aired, went along the air and vanished now. He is now depressed person, and it is showing its effect. Little birds of Kollywood say that the producer is contemplating to file a complaint with Producers’ Council, blaming Vijay, for the loss he has suffered due to Thalaivaa. It is said that had Vijay not talked anything about politics, the producer would have earned Rs.20 cores profit. Instead, he lost the profit, and incurred a loss, lamented a source from the producer. The news must have been reached the doors of Vijay. It is to be seen now, whether it will be a ‘phailin’ storm or a ‘storm’ in the cup!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘HOT HOT’ சூர்யா- ‘COOL COOL’ கவுதம் மேனன்!

நேற்று மாலை சூர்யா அனுப்பிய அறிக்கை இன்டஸ்ரியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. ‘துருவ நட்சத்திரம்’ இப்படி துரு பிடித்த நட்சத்திரமாகி எங்கோ கண்காணாத இடத்தில் விழுந்துவிட்டதே... என்று...

Close