பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு

2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்திருந்தது. ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து ஜூன் மாதத்துக்குள் இந்த நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. இதற்கு சில விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுக்கள் மற்றும் ஆண்டு குறிப்பிடப்படாத நோட்டுக்களை மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.

அதேசமயம் மேற்குறிப்பிட்ட பழைய நோட்டுக்களை பொதுமக்கள் தொடர்ந்து சுதந்திரமாகப் பயன்படுத்தலாம். ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் பணிகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்யப்படும். அதனால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இருக்காது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிப்பா? இசையா? தொடர் குழப்பத்தில் ஜி.வி.பிரகாஷ்

பாலா படம் கைநழுவி போனதில் இருந்தே உஷாராகிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஆத்துல ஒரு காலும் சேத்துல ஒரு காலும் வச்சா, ஆறும் போச்சு, சேறும் போச்சு என்றாகிவிடும்...

Close