பாடி பில்டர் களின் நகைச்சுவை கதை …!

சிவசுப்ரமணியன் , ஸ்ரீநிவாஸ் தயாரிப்பில் எஸ் எஸ் பிக் சினிமாஸ் வழங்கும் படம் ” கன்னா பின்னா ” இந்த படத்தை இயக்கும் தியா என்ன சொல்கிறார்?

பொதுவாக பாடி பில்டர்களை சினிமாவில் அடியாள் கதாபாத்திரங்களுக்கும் வில்லன் கதாபாத்திரங்களுக்குமே பயன்படுத்தி வருவார்கள் . அதிலிருந்து மாறுபட்டு முழுக்க, முழுக்க அனைத்து பாடி பில்டர்களையும் நகைச்சுவை கதாபாத்திரங்களாக படம் முழுவதும் நடிக்க வைத்திருக்கிறோம் . பார்ப்பதற்கு பிரமாண்டமான உடலமைப்பில் காட்சியளிக்கும் இந்த உடற்கட்டு வீரர்கள் பெரும்பாலும் குழந்தைதனமாகவும் ,நகைச்சுவையானவர்களாகவும் தான் இருக்கிறார்கள் , அப்படிபட்டவர்களின் வாழ்க்கையைத்தான் படமாக்கி இருக்கிறோம். தமிழகம் முழுவதும் இருந்து நிறைய பாடி பில்டர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் . தமிழகம் , மற்றும் புதுவையில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம் . படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வருபவர்கள் கூட முதலில் ” அடேங்கப்பா இவ்வளவு பாதுகாப்பு வீரர்களா ? “. என்று வியந்து விட்டு பிறகு நடிப்பதே இவர்கள்தான் என்று தெரிந்து கொண்டு …. முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் .

யூனிட் ஆட்கள் மட்டுமல்ல நடிக்கும் நடிகர்களும் கூட பல காட்சிகளில் நடிப்பை மீறி சிரித்து கொண்டுதான் இருந்தனர் .. அந்த அளவுக்கு படம் முழுவதும் நகைச்சுவை இருக்கிறது . சில இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு எங்களுக்கு காவல்துறை ஒத்துழைப்பு கூட தேவைப்படவில்லை , படம் யூனிட் முழுவதும் பாடி பில்டர்களை பார்த்தோ என்னவோ எந்த இடையூரும் எந்த இடத்திலிருந்தும் வரவில்லை என்று சொல்லும் இயக்குனரும் ஒரு பாடி பில்டர்தான் , அதுமட்டுமல்ல படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் நண்பர்கள் இருவரும் கூட பாடி பில்டர்கள்தான் .

முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் “கன்னா பின்னா ” எந்த இடத்திலும் ரசிகர்களை சோர்வு அடைய விடாமல் சிரிக்க வைக்கும் அளவுக்கு படம் இருக்கிறது என்கிறார் தியா . கதாநாயகியாக அஞ்சலி ராவ் நடிக்க, எழுதி இயக்கி நடிக்கிறார் தியா .

ஒளிப்பதிவு- ஜெரொல்ட் ராஜ மாணிக்கம் ,

இசை – ரோஷன் சேதுராமன் ,

எடிட்டிங் -பிரபாகர்

பாடல்கள் – ஸ்ரீதர்

Read previous post:
“Yatchan will be a delightful treat to all” – Director Vishnuvardhan

Director Vishnuvardhan has been an epitome of power factory within, a maker with splendid and spontaneous ideas. Winning laurels for...

Close