பாட்டி செத்துட்டதா ஸ்டேட்டஸ் போட்டா கூட ‘லைக்’ கொடுக்கிறாங்க… -ஃபேஸ்புக் உலகத்தை கிண்டலடிக்கும் வைரமுத்து மகன்!
கவிப்பேரரசு வைரமுத்து குடும்பத்தில் அவரை தவிர மற்றவர்களும் பேச்சாளர்கள்தான். ஆனால் அவரை போல வீச்சாளர்கள் அல்ல. அவர் பேசினால் அதில் இருக்கிற கம்பீரம், அவரது புத்திரர்களுக்கு இருக்கிறதா என்றால்… ம்ஹும். சுட்டுப்போட்டாலும் அது வராது. ஆனால் மென்மையாக பேசுகிறார்கள் கபிலனும், மதன்கார்க்கியும். அதில் நிறைய விஷயமும் சுவாரஸ்யமும் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஏனென்றால் அவர்களின் பிளட் குரூப் அப்படி!
அண்மையில் ஃபேஸ்புக் பற்றி மதன்கார்க்கி பேசியதை கேட்பவர்கள் ஒவ்வொரு லைக்குக்கு முன்பும், ஒவ்வொரு ஷேருக்கு முன்பும் லேசாக யோசிப்பார்கள்.
ஃபேஸ்புக் ஒரு வித்தியாசமான உலகமா இருக்கு. என் பாட்டி இறந்துவிட்டதாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் இருபது பேர் அதுக்கு ‘லைக்’ கொடுக்கிறார்கள். இது என்னோட லவ்வர் படம். ரொம்ப ரகசியமா எடுத்தேன் என்று ஒரு படத்தை போட்டால் அதை இருபது பேர் ‘ஷேர்’ பண்ணி விட்டுவிடுகிறார்கள்.
இப்போதெல்லாம் திண்ணை பேச்சு குறைந்து விட்டது. திண்ணைக்கு பதிலாகதான் ஃபேஸ்புக் வந்திருக்கிறது என்றார் மதன்.