பாட்டுக்கும் வந்தாச்சு பரீட்சை !!!

“எங்க காலத்தில் குருநாதர் வீட்டில் குருகுல வாசம் இருந்து இசைக் கலையைக் கத்துக்கிட்டோம். ஐயாயிரம் வருட பழமையான நம்ம இந்தியக் கலாச்சாரத்திலும் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ னு கடவுளுக்கு மேலா குருவை உயர்த்தி வச்சிருக்கு… ஆனால் இன்றைய அவசர யுகத்தில் குருகுல வாசம் சாத்தியமில்லை. ஆதனால், இந்த கிரேடிங் சிஸ்டம் குருகுல வாசத்துக்கு இணையான ஒரு அருமையான மாற்றுத் தீர்வு’’ மனம் நெகிழ்ந்து சொன்னார் கர்னாடக இசை பிதாமகர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள். சமீபத்தில் கலாஷேத்ராவில் நடந்த “பிரிட்ஜ் அகாடமி ஃபார் மியூஸிக் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸ்’’ அமைப்பின் “8 கிரேடிங் சிஸ்டம்’’  அறிமுக விழாவில்தான் அவர் இப்படி மனம் திறந்து பாராட்டினார்.

அவர் மட்டுமல்ல “தன் குழந்தைகளுக்கு பாட்டு, நடனம்னு சொல்லிக் கொடுக்க ஆசைப்படற இன்றைய பெற்றோர்கள், ஆசிரியர்களோட பாப்புலாரிடியை மட்டுமே மனதில் கொண்டு அவர்களிடம் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் எந்தளவு தம் குழந்தைகள் கற்பதில் முன்னேறியிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடிவதில்லை. அந்தக் குறையை இந்த கிரேடிங் சிஸ்டம் தீர்த்து வைக்கும்’’ என்றார் பிரபல பரதக் கலைஞர் தனஞ்செயன்.

“இந்த மாதிரி கலைகளை ஃப்ரொபஷனலா எடுத்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த கிரேடிங் முறை வரப் பிரசாதம்’’ என்ற பிரபல கர்னாடக இசைப் பாடகி நித்ய ஸ்ரீ. “வெஸ்டர்ன் மியூஸிக்கில் வாய்ப்பாட்டோ வாத்தியங்களோ கற்றுக் கொள்ளும்போது படிப்படியாக எட்டு லெவல்களில் பரீட்சை எழுதி பாஸ் பண்ணினால்தான் சர்ட்டிபிகேட் வாங்க முடியும். ஆனால் நம் கர்னாடக இசையில் அப்படி பரீட்சை முறை இல்லாத குறையை தீர்த்து வைக்க பிரிட்ஜ் அகாடமி முன்வந்திருக்கிறது’’ என்றார்.

ஓவியம், இசை கருவி, பாட்டு, நடனம் கற்று தருபவரா நீங்கள் ?

‘பிரிட்ஜ் அகாடமி’ பாட்டு, நடனம், இசை, ஓவியம் சார்ந்த பல்வேறு பிரபல கலை, கலாச்சார அமைப்புகள், வல்லுநர்களை ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்து இந்த வல்லுனர்களின் பரிந்துரைகளின்படி, ஒவ்வொரு கலை பிரிவுக்கும் எட்டு நிலைகளில் பாடத்திட்டம் வடிவமைக்கப் பட்டு 8 கிரேடுளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தங்கள் ஆசிரியர்கள் மூலமாக மாணவர்கள் கலந்து கொண்டு பரிட்சைகளை எழுதி தகுதி சான்றிதழ் பெறலாம். பள்ளியிலோ, தனிப்பட்ட முறையிலோ  பாட்டு, நடனம், இசைக்கருவிகள், ஓவியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இத்திட்டத்தை நடை முறைபடுத்த www.bridgeacademy.ac.in என்ற இணைய முகவரியை பார்க்கவும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கணக்கு போட்ட கவுதம் மேனன் கவிழ்த்துவிட்ட ஹாரிஸ் ஜெயராஜ் -அஜீத் பட அரசியல்

ஒரு படத்தின் டிசைன் செய்வதுதான் உலகத்திலேயே மிகவும் கஷ்டமான விஷயம். ஈகோ, கோபம், முன்ஜெம்ம பகை எல்லாவற்றையும் மறந்துவிட்டு கைகோர்க்க முன் வந்தாலும், சம்பளம் வந்து குறுக்கே...

Close