பாட்டு வந்தது… பின்னாலேயே பணமும் வந்தது… விதார்த் பட விசேஷம்!
விதார்த்தின் அடுத்த ரிலீஸ் அஜீத்தின் ‘வீரம்’தான். மைனா வெற்றிக்கு பிறகு ராட்சத கழுகாக மாறுவார் என்று எதிர்பார்த்தால், மைனா தேய்ந்து எறும்பாகிப் போனதுதான் மிச்சம். இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தவரின் அதிரடி ஆட்டம்தான் இந்த வீரம். பொதுவாகவே அஜீத்தின் நல்ல மனசுக்கு அவருடன் சேர்ந்து நடிக்கும் மற்ற ஹீரோக்களே எடுத்துக்காட்டு. ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு அஜீத் கொடுத்த முக்கியத்துவமே இதற்கு சாட்சி. வீரம் படத்திலும் விதார்த்தை அவர் கைவிட மாட்டார் என்று நம்புவோமாக.
இதற்கிடையில் விதார்த் நடித்து விரைவில் வெளிவரப்போகும் நல்ல பட லிஸ்ட்டில் இருக்கிறது ‘வெண்மேகம்’ என்ற திரைப்படம். ராம் லட்சுமண் என்ற இரட்டையர்கள் இயக்கியிருக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விதார்த், இந்த படத்தில் என் கேரக்டர் கூட அவ்வளவு பெரிசாக பேசப்படப் போவதில்லை. ஆனால் படத்தில் நடித்திருக்கும் ஜெயஸ்ரீ சிவதாஸ் கேரக்டர் ரொம்பவே வலுவானது. பேசப்படும் என்றார். பதிமூணு வயதான ஜெயஸ்ரீ கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை இரண்டு முறை வாங்கியவராம். ஷுட்டிங்குக்கு நடுவுல புக்கை வச்சு படிச்சுகிட்டே இருப்பார் என்றெல்லாம் பாராட்டினார்கள் இவரை. (நோட் பண்ணுங்க லட்சுமிமேனன்…)
இயக்குனர்களான ராம் லட்சுமணன் இரட்டையர்களே இந்த படத்தையும் தயாரித்திருக்கிறார்கள். இவர்களின் கைகள்தான் கருப்பே தவிர, அதில் ஓடும் தன ரேகை ரொம்பவே வெள்ளந்தி என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்றை சொன்னார் பாடலாசிரியர் சு.செந்தில்குமரன். ‘சுமார் ஆறு மாதத்திற்கு முன்பு நண்பர் ஒருவர் ஒரு படத்துக்கு பாடல் எழுதணும். உங்களால் முடியுமா, மியூசிக் டைரக்டர் கேரளாவை சேர்ந்த ஜாபர்ஹனி’ என்றார். நான் அன்றைய தினமே கேரளாவுக்கு கிளம்ப ஆயத்தமாகிட்டேன். ஆனால் என்னை அதிகம் அலையவிடாத மியூசிக் டைரக்டர் ட்யூனை என் மெயில் அட்ரசுக்கு அனுப்பி வைத்தார். நானும் அன்று இரவே ‘வண்ணங்கள் நீயானாய்…. வானவில் நான்தானே’ என்ற பல்லவியுடன் ஆரம்பித்து முழு பாடலையும் எழுதி அனுப்பிவிட்டேன். கிட்டதட்ட அதை மறந்தும் போனேன்.
சில வாரங்கள் கழித்து எனக்கு போன் செய்த இயக்குனர்கள், பாடல் வரிகளுக்காக என்னை பாராட்டியதுடன் என் பேங்க் அக்கவுண்ட் நம்பரை கேட்டார்கள். ஒரு நல்ல தொகையை அக்கவுன்ட்டில் செலுத்தவும் செய்தார்கள். அதற்கப்புறம் பல மாதங்கள் கழித்து இப்போதுதான் இருவரையும் நேரில் பார்க்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர்களின் தன ரேகையை டச் பண்ணுவதற்குள் கால் ரேகையே தேய்ஞ்சு போகிறளவுக்கு அலைய விடுகிற சினிமாவுலகில் இப்படியும் சிலர். இந்த ‘வெண் மேகம்’ உயரத்தில் பறக்கட்டும்!
Lyricist Senthil Kumaran surprised with producers of Venmegam
Vidharth who deputed with critically acclaimed film Mynaa is awaiting the release of his next film Veeram with Ajith. Hopefully it will bring him many more accolades as Arya received from Arrambam. Vidharth is playing the lead in yet another film Venmegam directed by Ram-Laxman duo, who also produce the film. The audio launch of the film was held recently in which all cast and crew were present in full strength.
Speaking on the occasion Vidharth said more than him, the film will receive appreciation for 13 years old Jayasri Sivadas, who has already received 2 State awards from Kerala government. She will always seen reading her school books during the breaks, said Vidharth.
Lyricist Senthil Kumaran revealed how he was pleasantly surprised by the producers of the film. The due asked him if he could write a lyric for the tune of music director from Kerala. When he has given the nod, the music director, Jaffar Hani, has sent by mail the tune of his composition. He wrote the lyric Vannangal Neeyanai …. Vanavil Naanthane. He sent it to the music director and has forgotten about it. After sometime, the directors duo called him and appreciated the lyric and asked him his account number and have deposited a good sum in his account. This has been quite surprising looking to his previous experience where one has to meet or speak time and again to get the remuneration. May the tribe of Ram-Laxman grow!
என்னைப் பற்றி உங்கள் பொன்னான கரங்களால் எழுதிய வரிகளுக்கு மிக நன்றி அந்தணன் சார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் நான் பேசிய வீடியோ இணைப்பை டைம் கோட் உடன் கொடுத்து இருக்கிறேன்– நமது மதிப்பு மிகு http://www.newtamilcinema.com நேயர்களுக்காக .
http://www.kollytalk.com/video/venmegam-movie-press-meet-videos-125625.html
4:26 to 15:50
and
22:45 to 23:06