பாதுகாப்பு காரணங்களுக்காக ரெயிலில் ஏசி பெட்டிகளில் திரைகள் நீக்கம்

ரெயில்களில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் பயணிக்கிற பயணிகளின் அந்தரங்கத்தை கருத்தில் கொண்டு இருக்கைகளின் ஓரத்தில் மறைவுக்காக (நடைபாதையில்) திரைகள் பொருத்தப்படுவது, கடந்த 2009-ம் ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி ஆந்திர மாநிலம், அனந்தப்பூரில், பெங்களூர்-நாந்தெட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு ஏ.சி. மூன்றடுக்கு பெட்டியில் தீப்பிடித்தது. இதில் அந்த பெட்டியில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து ரெயிலில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் ஜன்னல் திரைகளைத் தவிர்த்து பிற திரைகளை அகற்றி விடலாம் என ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது. இதுபற்றி ரெயில்வே வாரியம், கடந்த 12-ந் தேதி கூடி விவாதித்தது. அதன் முடிவில், ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் பரிந்துரையை அடுத்து மூன்றடுக்கு பெட்டிகளில் திரைச்சேலைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரெயில்வே வாரியத்தின் முடிவு, அனைத்து மண்டல ரெயில்வேகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்கள் பராமரிப்புக்காக பணிமனைகளுக்கு செல்கிறபோது, இந்த திரைகளை அகற்றி விடுவார்கள்” என தெரிவித்தார்.

ரெயில்களில் மேலும் விபத்து பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக வரும் 24-25 தேதிகளில், 2 நாள் சர்வதேச கருத்தரங்குக்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் நடக்கிற இந்த கருத்தரங்கில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வல்லுனர்கள் கலந்துகொள்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நெடுஞ்சாலை / விமர்சனம்

சீவலபேரி பாண்டி, மலையூர் மம்பட்டியான் என்று அந்த கால டெரர் ஆசாமிகளுக்கெல்லாம் ஆயுள் காப்பீடு செய்து அதன் பிரிமியத்தையும் வட்டியையும் சேர்த்தே அனுபவித்து அனுப்பியும் வைத்துவிட்டது தமிழ்...

Close