பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்… எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு தொடர் சிகிச்சை
எழுத்தாளர் ஜெயகாந்தன் சென்னை சாலிகிராமத்திலிருக்கும் பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவசர சிகிச்சை பிரிவிலிருக்கும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி பரவிய கணத்திலிருந்தே உலகம் முழுவதுமிருக்கிற அவரது ரசிகர்கள், ‘அவருக்கு என்னாச்சோ?’ என்று அக்கறையோடு விசாரித்த வண்ணம் இருக்கிறார்கள்.
இன்று பிற்பகல் குளியலறையில் வழுக்கி விழுந்தாராம் அவர். இதனால் மயக்கமுற்ற ஜெயகாந்தனை அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதுடன், முக்கியமான பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
மருத்துவமனையில் அவரது மகன் மற்றும் மகள்கள் அனைவரும் மருத்துவர் சொல்லும் நல்ல செய்திக்காக காத்திருக்கிறார்கள்.
இவர்களை போலவே அவரது லட்சக்கணக்கான வாசகர்களும்….
எழுத்தாளர் ஜெயகாந்தன் நலமுடன் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.