பாராளுமன்றத்திற்கு வெளியே வேஷ்டியை கட்டியாவது அதில் படத்தை திரையிடுங்கள் ரவி….

சில படைப்புகளுக்கு மட்டும்தான் சட்டை காலராக கொத்தாக பற்றியிழுத்து ‘பார்றா இந்த அநியாயத்தை’ என்று கதறுகிற தைரியமிருக்கும். பாலாவின் படைப்புகளுக்கு இருக்கிற அதே தைரியத்தை தன் படைப்பிலும் ஒருவர் கொண்டு வருகிறார் என்றால், அவர் பாலாவின் சிஷ்யராகதான் இருக்க வேண்டும். யெஸ்… ரவியும் பாலாவின் சிஷ்யர்தான்.

நடுவில் ஆச்சார்யா என்ற படத்தை இயக்கி மீண்டும் பாலாவிடம் சேர்ந்து கொண்டார் ரவி. ‘டேய்… நீ போய் வேற படம் டைரக்ட் பண்ணலாம்ல?’ பாலா இப்படி கேட்க, ‘நல்ல கதை வரும்போது நானே போவேன். அதுக்காகதான் காத்திருக்கேன்’ என்றார் ரவி. அந்த நல்ல கதை அவருக்கு தோன்றிய நேரம், பெண்குலத்திற்கே ராவுகாலம் ஒழிந்த நேரம்.

வெறும் சில்லரை காசுகளுக்கும், சிற்சில ரூபாய்களுக்கும் பெண்களை விற்கும் கிராமம் ஒன்றில் பிறக்கும் கதாநாயகியை பற்றிய படம்தான் ரவி இயக்கிய ‘என்னதான் பேசுவதோ’. சட்டை இதுதான் என்றாலும், சதை வேறு. அந்த சதையை அப்படியே தோலுரித்திருக்கிறாராம் ரவி. பீகார் போன்ற வட இந்தியாவில் நடக்கும் அநியாயங்களை அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கிறாராம். இப்படத்திற்காக திரையிடப்பட்ட ட்ரெய்லரில் தற்போது வாழும் தலைவர்களான (ஏண்டா வாழுறீங்க?) நிதிஷ்குமார், லல்லுபிரசாத் ஆகியோரின் பேச்சுகளையும் காண்பிக்கிறார் ரவி.

தயாரிப்பாளர் சி.மகேஷ்குமார் மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோவையும் ஹீரோயினையும் துணை நடிகர்களையும் வைத்து கூட இந்த படத்தை எடுக்கலாமே என்றார். கதையின் நம்பக தன்மைக்காக நான்தான் புதுமுகங்களை நடிக்க வைத்தேன் என்கிறார் ரவி. பீகாரில் பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கி, அவர்கள் நன்றாக வளர்ந்தவுடன் மறு விலைக்கு விற்கும் தரகர்கள், அவளை குற்றாலத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். இங்கே அவளுடன் பழகும் நண்பர்கள் ஒரு கட்டத்தில் அவளை இழக்கிறார்கள். பின்பு அவளை தேடியலையும் அவர்கள் கண்டு பிடித்தார்களா? அவள் தப்பித்தாளா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

இந்தியாவின் சில கிராமங்கள் இன்னும் அந்த தொழிலை செய்து கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த படத்தில் நடித்திருக்கும் நிஜ தரகர்களே சாட்சி. (வெட்கக்கேடு)

நா.முத்துகுமார் பாடல்களை எழுத, டி.இமான் இசையமைத்திருக்கிறார். வசனம் எஸ்.ராமகிருஷ்ணன். இப்படி சில விஷயங்களே படத்தின் தரத்தை சொல்வதால், வெகு ஆவலோடு காத்திருக்கிறது தமிழ் திரையுலகம். என்னதான் பேசுவதோ திரைக்கு வந்த பின்பாவது தங்கள் ராஜ்ஜியத்தில் இப்படியும் சில கிராமங்கள் இருப்பது இந்த கேடுகெட்ட தலைவர்களுக்கு தெரியுமா? பாராளுமன்றத்திற்கு வெளியே வேஷ்டியை கட்டியாவது படத்தை திரையிடுங்கள் ரவி….

Director Ravi, with Ennathan Pesuvatho hopes to bring burning issue about sale of infant and young girls to the fore!

Director Ravi, who rejoined his mentor Bala as Asst. Director, was asked by Bala why he did so. He responded saying that he would do when new story strikes him. It has struck Ravi now and he has brought out a memorable film (we infer from the trailer that has been shown and the inputs the director had given) about the sale of young girls from northern India.

Director Ravi says that his film ‘Ennathan Pesuvatho’ revolves around a girl who underwent such an unpleasant experience. He says there is a practice in northern Indian States that people will sell baby girls and small aged girls for a price to others who buy them and after they grow up sell them again for a profitable price. Ravi has brought out a story of one such girl who was sold to a person in Kutralam, Tamil Nadu, where she befriends with boys of her age. When she suddenly disappeared her friends panicked and try to locate her. Whether they were able to locate her, has she received timely help and escaped from the cruel practice form the crux of the story, director Ravi revealed.

When the producer asked him why not go in for popular artistes he said that he has confidence in his story and hence he decided to work with new faces in the film. D Imman has composed music for the film while Na. Muthukumar has penned the lyrics for the film.

Going by the trailer and the synopsis given by the director Ravi, it is bound to be Award winning film, not national, but we are talking of international Awards.

Read previous post:
கடைசிநேர இழுபறி… வீரம் இப்போது ‘சன்’ கையில்!

முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களையும், முன்னணி இயக்குனர்களின் படங்களையும் கைப்பற்றும் முயற்சியில் ஆரம்பகாலத்தில் ஜரூராக இருந்தவர்கள் சன், ஜெயா, கலைஞர் தொலைக்காட்சிகள்தான். நடுவில் z tamil தொலைக்காட்சியும்...

Close