பாலகிருஷ்ணாவோட நடிக்க முடியலையே… – நயன்தாரா ஷாக்!

ஆந்திராவில் பாலகிருஷ்ணா நடிக்கிற படங்களில் அவரது பேத்தி வயசுள்ள இளம் ஹீரோயின்கள் அவருக்கு ஜோடியாக நடிப்பார்கள். அதுவும் பிரபல நடிகைகளே இந்த பலியாடு போட்டிக்கு நான் நீ என்று முந்திக் கொண்டு நிற்பதுதான் ஆச்சர்யம். வேறொன்றுமில்லை, பாலகிருஷ்ணாவின் செல்வாக்கு அப்படி.

அவரே முன்னணி நடிகைகள் சிலரது பெயர்களை டிக் அடித்து ‘இவர்கள் இருந்தால் ஓ.கே’ என்பாராம். அப்புறமென்ன? பிடித்துக் கொண்டு வர வேண்டியது தயாரிப்பு நிர்வாகிகளின் வேலை. அதில் ஒன்றும் சிரமமும் இருக்கப் போவதில்லை. ராமராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்ததெல்லாம் அப்படிதான். தமன்னா கூட பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்றெல்லாம் ஆந்திராவிலிருந்து வரும் திடுக்கிடும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயசாகிவிட்டது என்பதை இன்னும் மக்களே ஒப்புக் கொள்ளாத நிலையில் நடிகைகள் அது பற்றி பேசவே முடியாதல்லவா? போகட்டும்… இவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும், நயன்தாரா மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்பட்டார் என்பதுதான் வியப்பிலும் வியப்பு.

ராமராஜ்ஜியம் படம்தான் தனது கடைசி படம் என்று இவர் நினைத்திருந்தாரல்லவா? ஆனால் அதற்கப்புறமும் அவர் ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டிருப்பதற்கு காரணமே பாலகிருஷ்ணாதானாம். அவரது அட்வைஸ் கேட்டுதான் புத்துணர்ச்சியோடு மீண்டெழுந்தாராம் நயன். இந்த ஒரு காரணத்திற்காகவே மீண்டும் பாலகிருஷ்ணாவுக்கு கடமைப்பட தயாராக இருந்தார் நயன். இருந்தாலும்… பாலகிருஷ்ணாவின் லேட்டஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடி நயன்தாரா இல்லை. யாரோ ஒரு மும்பை நடிகையாம். இதில் ரொம்பவே ஏமாற்றமாம் நயனுக்கு.

Nayanthara not in Balakrishna’s film

Balakrishna in Telugu Cinema is one actor who weilds support and influence across his state. Every budding actress there would like to pair with him in at least one film, so that she gets the desired recognition amongst the people. Nayanthara though vied for a role, she was offered the role to play the lead opposite to Balakrishna. She was seen in Balakrishna’s earlier film Rama Rajyam which was a run away hit and also fetched the actress the best actress award. But she lost the opportunity to pair with him against, as the makers are planning to rope in a Mumbai actress. She might felt sad as she could not be part of Balakrishna’s film. The sadness is because not for losing the opportunity but not able to reciprocate a sweet gesture to Balakrishna. It is said that it was Balakrishna who gave Nayan a pep talk and support in resurrecting her career once-again. So all the success and recognition Nayan has got now, is due to Balakrishna, feels the actress. It is under the context she felt sad.

ஏன்யா நாட்ல பூகம்பம் வராது?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘மா நன்னா போலீஸ்!’ விழாவில் சினேகா , இது ஆந்திரா மிளகாய்ங்க…

சினேகாவின் கொண்டையில் முடிந்து கொள்ள ஏராளமான ஹிட்டுகள் இருந்தாலும், ரொம்பவே ஸ்பெஷல் என்று சொன்னால் அது ‘ஹரிதாஸ்’தான். தனது கல்யாண அறிவிப்பு வந்த பின் அவர் கமிட்டான...

Close