பாலசந்தருக்கு ஹார்ட் பிராப்ளம் வந்ததே என்னாலதான்! -கமல் பரபரப்பு பேச்சு….
‘இந்த பொம்பளைங்களே இப்படிதான் புரிஞ்சு போச்சுரா’ என்று பாடவும் ஆடவும் ஆண்களுக்கு உரிமையிருக்கும் போது ‘இந்த ஆம்பிளைகளே இப்படிதான்’ என்று படமெடுக்கவும் ஒருவர் வேண்டுமல்லவா? நடிகை ஸ்ரீப்ரியா அந்த சாட்டையை கையில் எடுத்திருக்கிறார். இவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படத்தின் கதை என்ன என்று தெரிந்தால், சபலப்படும் ஆண்கள் அத்தனை பேரும் லேசாக துணுக்குறுவார்கள். இந்த படம் வெளிவந்த பின்பு வருகிற தாக்கத்தைவிட, அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் எழுந்த தாக்கம் 100 கி.மீட்டரில் அடிக்கும் சூறாவளியை விட வேகம்!
ராதிகா, சுஹாசினி, லிசி பிரியதர்ஷன், (இந்த லிஸ்ட்ல ரேவதியை காணோம்) ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்க, வடிவுக்கரசி, லட்சுமி போன்றோர்கள் கீழே அமர்ந்திருந்தார்கள். ‘சினிமா இப்போ இன்பேலன்சா இருக்கு. முன்னெல்லாம் ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட் நிறைய வரும். பாலசந்தர் போன்றவர்கள் அப்படிப்பட்ட படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்போ மருந்துக்கு கூட அப்படிப்பட்ட படங்கள் வர்றதில்ல. அந்த மாதிரி படங்களும் வந்தால்தான் சரியா இருக்கும்‘ என்றார் சுஹாசினி. ‘ஸ்ரீப்ரியாவை தன் படத்தில் நடிக்க வைக்கணும் என்று என் கணவர் மணிரத்னம் ரொம்ப ட்ரை பண்ணினார். பட் ஏதேதோ காரணங்களால் முடியல. இருந்தாலும் அவரது குரலாவது தன் படத்தில் இருக்கணும் என்று அவரை அழைத்து டப்பிங் பேச வைத்தார்’ என்று ஸ்ரீப்ரியாவின் பெருமைகளை கூறி விட்டு அமர்ந்தார் சுஹாசினி.
அதற்கப்புறம் மைக்கை பிடித்த ராதிகா பேசியதுதான் பயங்கரம். நாட்டு நடப்பை அப்படியே உரித்து வைத்தார் அவர். ‘இப்ப வர்ற படங்கள் ஏன் இப்படியிருக்குன்னே தெரியல. காலையில் எழுந்ததுமே, இன்னைக்கு எந்த பெண்ணை சைட் அடிக்கறதுன்னுதான் பேசிக்கிறாங்க. அந்த காலத்துல சில்க் ஸ்மிதா, ஜெயமாலின்னு ஒரு கவர்ச்சி டான்ஸ் இருக்கும். இப்போ அதுக்கு பதிலா டாஸ்மாக்குல ஒரு பாட்டு இருக்கு. அப்பாவை பார்த்து மகன், யோவ் பா…(இந்த இடத்தில் ஒரு எழுத்தை சேர்த்துக் கொள்ளவும்) ன்றான். இப்படி போயிட்டு இருக்கு தமிழ்சினிமா. கிரேட்…’ என்றார் கவலையோடு. அவர் இவ்வளவு அப்பட்டமாக பேசியதை அதிர்ச்சியோடு கவனித்த கமல், பாலசந்தர், சூர்யா உள்ளிட்ட அத்தனை பேரும் ‘பேஸ்த்’ அடித்து அமர்ந்திருந்தார்கள். நல்லவேளையாக விஜய் சேதுபதியின் ‘சூதுகவ்வும்’ படத்தை பாராட்டிவிட்டு அமர்ந்தார் ராதிகா.
சூர்யாவின் பேச்சில் அதிக பொறுப்புணர்வு. ‘தற்போதைய தலைமுறையின் மீது பெரிய பழியே இருக்கிறது. நானெல்லாம் பெண் பிள்ளையை பெற்றிருக்கிறேன். இருபது வருஷம் கழிச்சு என் மகளின் தலைமுறை வரும்போது சமூகம் எப்படி இருக்கும் என்று ஒரு பயம் கண்முன்னே தெரியுது. இன்று ஒரு அமெரிக்க பேப்பரில் அஸ்ஸாம் மாநிலத்தில் ‘ரேப்’ ஃபெஸ்டிவல் நடப்பதாக எழுதியிருக்காங்க. அதை உண்மைன்னு நம்பி ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் யாரும் இந்தியாவிற்கு போகாதீங்கன்னு எழுதிட்டு இருக்காங்க. நாட்டில் நடப்பதை சினிமாவாக எடுக்கிறோம். சினிமாவில் எடுப்பதுதான் நாட்டில் நடக்கிறது. நம்மிடம் மிகவும் பலமான காட்சி ஊடகம் இருக்கிறது. இதை வைத்து நாம் செய்ய நினைப்பதை செய்யலாம். புதுமைப்பெண், அச்சமில்லை அச்சமில்லை, மனதில் உறுதி வேண்டும் போன்ற படங்கள் வேணும்னு தோணுது’ என்றார் கவலையுடன்.
‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் ஸ்ரீப்ரியாவையும் கமலையும் நடிக்க வைத்த கதையை அப்படியே விவரித்தார் கே.பாலசந்தர். நடிகை சுஜாதாவையும், ஜெயப்ரதாவையும் படப்பிடிப்பில் அழ வைத்த கதையை அவர் விவரிக்க, இறுதியாக நன்றி சொல்ல வந்த ஸ்ரீப்ரியா நான் எதற்கும் அழுததில்லை என்றார். கமல் பேசும் போது இதற்கெல்லாம் பதில் சொல்வது போல பேசியதுதான் டாப்.
‘அப்பல்லாம் இவ்வளவு பெரிய இடத்துக்கு வருவோம்னு நாங்க நினைச்சதில்லை. எங்களை அவர் உருவாக்குன விஷயத்தை ஒரு இன்வென்ஷன்னே சொல்வேன் நான். அவருக்குதான் தெரிஞ்சுருக்கு நாங்க இவ்வளவு பெரிய ஆளா வரக்கூடும்னு. பாலசந்தர் சாருக்கு அவ்வளவு டென்ஷன் கொடுத்திருக்கோம் நானும் ஸ்ரீ ப்ரியாவும். அவரு எவ்வளவு திட்டுனாலும் நாங்க அழுததில்ல. அவருக்கு ஹார்ட் பிராப்ளம் வந்ததே எங்களாலதான்னு கூட நினைக்கிறேன்’ என்றார்.
Audio and trailer of Malini 22 Palayamkottai launched
The audio and the trailer launch of Sri Priya directed Malini 22 Palayamkottai was launched with much fanfare at Sathyam Cinemas, Chennai. While Kamal Hassan released the audio, actor Suriya received the first disc. The trailer of the film was launched by veteran director K. Balachandar and Sarathkumar. The who-is-who celebrities including Kayaar, director Vikraman, director Ameer, Vietnaam Veedu Sundaram, actor Vijay Sethupathi, Radhika Sarathkumar, Suhasini Manirathnam and actress Latha. The film a remake of Malayalam hit film 22 Female Kottayam, has Nithya Menon doing the lead role, with Krish J Sathar, Kovai Sarala, Vidyulekha Raman, Kota Srinivasa Rao, amongst others. Arvind Shankar has composed the tunes for the lyrics of Na. Muthukumar.
We share the speeches of some of the celebrities here:
Producer Rajkumar welcomed the gathering. He said he is planning to produce the film in Hindi and Sri Priya would be directing it as well. He has also revealed that the film could be completed in 42 days as against the scheduled 60 days, thanks to Wide Angle Creations.
Suhasini Manirathnam was all praise for the veteran director K Balachandar for his vision, and for his women centric films. She expressed her anguish that not many women centric films are produced now a days, and she lauded the efforts of her friend Sri Priya in making the film.
Radhika Sarathkumar in her speech blasted the new trend happening in Tamil films recently citing examples. She said it has become an important feature to add a TASMAC song in the film. However she was full of praise for films like Soodhu Kavvum and Mysskin’s Onayum Attukuttiyum, which are entirely a different genre, from present day films. While appreciating the efforts of the producer Rajkumar in supporting Sri Priya directing the film, she said personally she would support a good film like Malini 22 Palayamkottai.
Suriya was very circumspect when he said, “I agree with Radhika ma’am. Things must change in Tamil cinema. More such women oriented films must come. There should be a balance in cinema. A real life story can be related to easily, which is why such films bag more accolades. Also direction means multi tasking. Women are generally the best in multi tasking and it is sad that there aren’t many women directors in the industry. I hope more directors like Sri Priya venture into cinema.”
Director K Balachandar recalled how he had introduced Sri Priya through Aval Oru Thodar Kathai. He compared Kamal and Sri Priya with their upcoming films Vishwaroopam and Malini 22 Palayamkottai. He went on to say that Sri Priya’s film is a Chinna Vishwaroopam. While he exclaimed to see her growth in filmdom, he also praised her guts instinct to take up directing the film of a subtle nature. He assured her that his best wishes are always be with her.
It was Kamal’s concluding remarks that gladden the hearts of everyone there. Kamal said that director K Balachandar has not introduced him or Sri Priya, but invented the potential in them, and revealed it to the world. He himself was not aware of the talents and it was because of director’s vision and guidance they are what they are today. He wondered if they were the reasons for the cause of heart ailment to the director. Speaking about Sri Priya, he said that he was fully aware of the guts she has in her and that has stood by her in good stead, in creating Malini. He wished Malini and Sri Priya ‘Good Luck’.