பாலா பட பாடல் கதறி அழுத பிரகாஷ்ராஜ்

Reea

பாலா இயக்கி வரும் தாரை தப்பட்டை படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் இசை என்பதை யாவரும் அறிவர். இந்த படத்திற்காக சுமார் 12 பாடல்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறாராம் இசைஞானி.

பிரகாஷ்ராஜின் உன் சமையலறையில் படத்திற்கும் இசைஞானிதான் இசை. இது தொடர்பாக நேற்று இளையராஜாவின் இசைக் கூடத்திற்கு வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். அங்கு பாலாவும் இருந்தார். பிரகாஷ்ராஜை பார்த்தவுடன் சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்த பாலா, என் படத்து பாடலை கேளுங்க என்று கூறி அவரை உள்ளே அழைத்து சென்று தன் படத்திற்காக இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்றை ஒலிக்க விட்டார்.

அதை கண்மூடி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த பிரகாஷ்ராஜ் நெகிழ்ந்து போனார். இப்ப மட்டும் இளையராஜா வந்தார்னா அவர் கால்ல விழுந்துருவேன் என்று பிரகாஷ்ராஜ் சொல்லவும், கதவை திறந்து கொண்டு இசைஞானி வரவும் சரியாக இருந்தது. பொசுக்கென்று அவர் காலை கட்டிப்பிடித்துக் கொண்ட பிரகாஷ்ராஜ், உணர்ச்சிப் பெருக்கில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். பிரகாஷ்… எந்திருங்க. என்று ராஜா அவரது தோள்களை பற்றி எழுப்பியும் விடாமல் சிறிது நேரம் அப்படியே இருந்த பிரகாஷ்ராஜ் சிறிது நேரம் கழித்துதான் ஆசுவாசமானார்.

இந்த பாடலை பாடிய பாடகர் ஷரத்தும் இதே போல இளையராஜாவின் கால்களை பிடித்துக் கொண்டு கலங்கியதாக கூறுகிறார்கள்.

ராகதேவனின் இன்னிங்சை தாண்டுவதற்கு அந்த ராகமே மனித பிறப்பெடுத்து வந்தால்தான் உண்டு போலிருக்கிறது.

Read previous post:
என்னமோ சதி நடக்குது… இயக்குனர் கவலை!

அண்மையில் திரைக்கு வந்திருக்கும் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’. பாரதியாரின் வரியாச்சே என்று அவர் ரசித்து வைத்த இந்த தலைப்பை, ஏதோ பிட்டு பட ரேஞ்சுக்கு சிலர்...

Close