பாலா முகத்தில் முழிக்கணுமே… சங்கடப்பட்ட அஜீத்

தமிழ்சினிமா கொண்டாடிக் கொண்டிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் பாலா. அதே தமிழ்சினிமா கொண்டாடிக் கொண்டிருக்கும் ஹீரோக்களில் ஒருவர் அஜீத். ஆனால் இவ்விருவருக்கும் நடுவில் இருக்கும் ‘பளக்க வளக்கத்தை’ கொண்டாடவே முடியாது. அந்தளவுக்கு ஒருவர் பெயரை இன்னொருவர் கேட்டால் சலித்துக் கொள்கிறார்களாம். அதுவும் எந்தளவுக்கு தெரியுமா? முகத்திலேயே முழிக்கக் கூடாது என்கிற அளவுக்கு.

இந்த சலிப்புக்கு பின் ஒரு வலி மிகுந்த பிளாஷ்பேக் இருக்கிறது. ‘நான் கடவுள்’ படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் அஜீத்துதான். இதற்காக தாடி, ஜடாமுடியுடன் சுமார் இரண்டாண்டுகள் திரிந்து கொண்டிருந்தார் அவர். தன்னை தேடி வந்த பல பட வாய்ப்புகளையும் மறுத்துவிட்டு பாலாவுக்காக காத்திருந்தார். ஆனால் அந்த படத்திலிருந்து திடீரென்று அஜீத்தை நீக்கிவிட்டு ஆர்யாவை ஒப்பந்தம் செய்தார் பாலா. இந்த வேதனையை தாங்கிக் கொள்ளவே முடியாத அஜீத், தனது இரண்டு வருட தாடியையும், தலை முடியையும் வேதனையோடு நீக்கினார்.

இன்று ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜீத்தின் பொசிஷன் இருந்தாலும், நான் கடவுள் படத்திலிருந்து விலக்கப்பட்ட அந்த நாளை இன்னும் மறக்காமலேயே இருக்கிறார் அவர். அதற்கு உதாரணம்தான் இது. கடந்த சில வாரங்களுக்கு முன் பாலுமகேந்திரா காலமானார் அல்லவா? இந்த துக்கத்திற்கு போகலாமே என்று அஜீத்திற்கு யோசனை சொல்லப்பட்டதாம். பொதுவாக இதுபோன்ற துக்க காரியங்களுக்கு முதல் ஆளாக போய் நிற்கிற வழக்கம் உடையவர் அஜீத். பைனான்சியர் ஒருவரது மறைவின் போது அவரது வீட்டுக்கு காலையில் சென்றவர், பிணத்தை எடுக்கிற வரைக்கும் பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் அங்கேயே அமர்ந்திருந்தார். இடுகாடு வரைக்கும் நடந்தே போய் அஞ்சலி செலுத்தினார். தனது உதவியாளர் சுரேஷ்சந்திராவின் சகோதரர் மறைவின்போதும் இதே போல நாள் முழுக்க நின்று அவருக்கு ஆறுதலாக இருந்தார். அப்படிப்பட்டவர் பாலுமகேந்திராவின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த நினைத்தாராம்.

ஆனால் அங்கு பாலா இருப்பார். பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இல்லேன்னா அந்த முகத்தையாவது நேருக்கு நேர் பார்க்கணும். இப்படியெல்லாம் யோசித்த அஜீத், தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு மகள் படிக்கும் பள்ளிக் கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு போய் விட்டாராம்.

சினிமாவிலும் கலைஞர் ஜெயலலிதா இருப்பாங்க போலிருக்கு!

Has Ajith skipped paying homage to late Balu Mahendra due to Bala?

Though Ajith and Bala carved a niche for themselves in Kollywood, they maintain distance and avoid meeting each other. Ajith who was upcoming star was booked for Naan Kadavul by director Bala and was growing hair and beard for the film for 2 years, and did not sign any new films during that period. However the director replaced Ajith with Arya without assigning any reason which hurts him till date. He meticulously avoided even seeing him face to face. It is for this reason Ajith did not visit Balu Mahedra’s house for paying homage to the veteran director, contrary to his character. Ajith normally will be the first person to visit such occasions without fail. However this time, he thought of seeing the director if he visited to pay homage, and instead went to his daughter’s school to participate in a function.

2 Comments
  1. Ghazali says

    சில விசயங்கள், வடுக்கள் மறையாதவை. ஆகக்கூடி எல்லோரும் மனிதர்கள்தானே?

  2. muthu says

    ithellam oru websitu thu!.oru manushanoda death ku porathu mukaim illa.bala va paartha avlo baiam.
    oru vela next ajith padathuku ascar award kuduthangana angaium bala iruntha ivaru poga maataru.
    intha jalra velaia vittutu vera nalla news podu.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
A Festival of Swedish Films’ Inauguration Stills

[nggallery id=124]

Close