பாஸ்போர்ட் மாயம்: துபாய் விமான நிலையத்தில் 5 நாட்களாக தவித்த இந்தியர்

கேரளாவைச் சேர்ந்த முகமது அலி கேரளாவின் கேலிகட்டிலிருந்து அபுதாபி வழியாக ரியாத் செல்லும் விமானத்தில் கடந்த 6ம் தேதி கிளம்பினார்.

ஆனால் கடுமையான மேகமூட்டம் காரணமாக அந்த விமானம் அல் அய்ன் வழியாக திருப்பி விடப்பட்டது. பின்பு தாமதமாக அபுதாபி விமான நிலையத்தை அடைந்தது.

வெகுநேரமாகியும் விமானம் கிளம்பாததால் பயணிகள் பதற்றமடைந்தனர். உடனடியாக ரியாத் செல்லும் பயணிகள் அனைவரும் அபுதாபியிலிருந்து ரியாத்திற்கு செல்லும் மற்றொரு விமானம் மூலம் செல்ல அறிவுறுத்தப்பட்டார்கள்.

அப்போது முகமது அலி, முதலில் வந்த விமானத்திலிருந்து இறங்கும் போது தவறுதலாக பாஸ்போர்ட்டை தனது இருக்கையிலேயே விட்டுவிட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் அந்த விமானத்திற்குள் செல்ல அவரால் முடியவில்லை.

இதையடுத்து பாஸ்போர்ட் இல்லாததால் அவரை ரியாத்திற்கு செல்ல விமான நிலைய அதிகாரிகள் அனுமதி தர மறுத்தனர்.

இந்நிலையில், அபுதாபி காவல்துறையினரும், ரியாத்தில் உள்ள முகமது அலியின் நண்பர்களும் அபுதாபியிலுள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவருடைய ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் 5 நாட்கள் கழித்து அவருக்கு இந்திய தூதரகத்தின் மூலம் தற்காலிக அவசரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இத்தகவலை ஐக்கிய அரபு நாடுகளுக்கான இந்திய தூதர் டி.பி.சீதாராம் அங்குள்ள செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Cuckoo Success Meet Stills

[nggallery id = 410]

Close