பாஸ் என்கிற பாஸ்கரன் 2 ம் பாகம் -புறக்கணித்தார் நயன்தாரா

எப்பவுமே பழைய தங்கத்துக்கு மவுசு அதிகம் என்பதை கடந்த சில வருடங்களாக நிருபித்து வருகிறார் நயன்தாரா. இவருடன் அறிமுகமானவர்கள் எல்லாம் இப்போது கோடம்பாக்கத்தில் அக்கா அண்ணி வேடத்திற்கு தயாராகிவிட்டார்கள். ஆனால் நயன்தாரா மட்டும், இன்னும் சின்ன பசங்களோடு ஜோடி போடுகிற அளவுக்கு இளமையும் இனிமையுமாக இருக்கிறார் இந்த வயதிலும். அதென்ன இந்த வயதிலும்? அவருக்கென்ன திருக்கடையூர் கோவிலை சுற்றிவருகிற வயசா? என்றெல்லாம் கேட்க துணியாதீர்கள். அவரது வயது கதாநாயகிக்கும் அதிகம். அக்கா கேரக்டருக்கும் குறைவு என்பதுதான் நிஜம்.

போகட்டும்… நாம் சொல்ல வருவது அது அல்ல, வேறு. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நடித்ததிலிருந்தே இவருக்கும் ஆர்யாவுக்கும் லவ் என்று கதை கிளப்பியது கோடம்பாக்கம். ஆனால் பிரியாணி பொட்டலத்தோடு அந்த வராத லவ்வையும் டஸ்ட் பின்னில் எறிந்துவிட்டார் நயன்தாரா. இந்த நேரத்தில்தான் மீண்டும் தனக்கும் அவருக்குமான பாசப்பிணைப்பை பந்தி வைத்து பரப்ப நினைத்தார் ஆர்யா.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் வரப்போவதாக செய்திகளை கிளப்பிவிட்டார். இதில் பாதி நிஜமும் கூட. அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இதில் நயன்தாரா நடிக்கப் போவதில்லையாம். ஆர்யாவுடன் இனி இணைந்து நடிப்பதில்லை என்கிற கொள்கை முடிவினால்தான் இந்த படத்தை அவர் புறக்கணித்திருப்பதாக கூறுகிறார்கள்.

நயன்தாரா இல்லாத பாஸ்கரனில் யார் நடித்தால் என்ன? வரும்போது பார்த்துக் கொள்கிறோம். இப்போதைக்கு நோ மோர் ஆர்வம்….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நிஜத்தில் இணைந்த சினிமா ஜோடி விலக நினைத்தாலும் விடவில்லை விதி…

சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’. இந்த படத்தை பூ, களவாணி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த எஸ்.எஸ்.குமரன் தயாரித்து இயக்கியிருக்கிறார். அபி சரவணன் என்ற...

Close