பா.ம.க பக்கம் பார்வையை திருப்பிய விஜய்? -அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஷுட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அவரது அடுத்த படம். அதற்கடுத்த படம் என்று வரிசையாக பிளான் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

விஜய்யை யாரும் எளிதாக சந்தித்து கதை சொல்லிவிட முடியாது. ஒரு முறை கதை கேட்டு டைரக்டரை தேர்வு செய்துவிட்டால் அவர் சொல்கிற தயாரிப்பாளருக்குதான் அந்த படம் போய் சேரும். இப்படி சரியாக பிளான் போடுவதுதான் அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருக்கிறது. தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் கூட வருடக்கணக்காக விஜய் பின்னால் அலைந்து திரிந்துதான் கால்ஷீட் வாங்கினார். தயாரிப்பாளர் தாணு துப்பாக்கி படத்திற்கு பிறகு இன்னுமொரு படத்திற்கும் கால்ஷீட் வாங்கிவிட துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் விஜய்யின் கருணை பார்வை ஒரு முக்கியமான தயாரிப்பாளரை நோக்கி திருப்பியிருக்கிறது. இதுதான் கோடம்பாக்கத்தையே திகைக்க வைத்திருக்கிறது. காரணம்? அந்த படத்தயாரிப்பாளரின் பேக்ரவுண்ட் அப்படி.

பா.ம.க தலைவர் கோ.க.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு விஜய் கால்ஷீட் கொடுத்திருப்பதாக அரசல் புரசலான தகவல்கள் கிடைக்கின்றன. சமீபத்தில் ‘என்றென்றும் புன்னகை’ என்ற வெற்றிப்படத்தை தயாரித்தவர் தமிழ்குமரன். அந்த படத்தை மிக நல்ல முறையில் விளம்பரம் செய்தததுடன், படத்தை உதயநிதி ஸ்டாலின் உதவியுடன் நாடு முழுக்க கொண்டு சேர்த்தவர் என்ற நல்ல பெயரும் இவருக்கு உண்டு. இதுபோன்ற பின்னணி பலம் வாய்ந்த தயாரிப்பாளருடன் இணைவது விஜய்கும் பலமாக இருக்குமல்லவா? அதனால்தான் இந்த கால்ஷீட் தாராளம் என்கிறார்கள்.

தலைப்பை படித்துவிட்டு தப்பு தப்பாக கற்பனை செய்தவர்களிடம் பெரிய எழுத்தில் ஒரு ஸாரி….

Producer Thirukumaran gets Vijay’s dates

PMK leader K. Mani’s son Thirukumaran has debuted to film industry with Endrendum Punnagai starring Jiva and Trisha has catapulted to higher echelon in Kollywood. There is a strong buzz  doing rounds in Kollywood circle that Ilayathalapathi Vijay has given call sheets to him for producing his next film after director Chimbudevan’s film, produced by Vijay’s Manager Selvakumar. Despite being a debutant producer Thirukumaran has done good well with Endrendum Punnagai to get the maximum reach by joining hands with Udhayanidhi Stalin. It is also said that this connection with PMK is purely on professional background and there is no political link up involved in it.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நிர்வாணமாக திரியும் சுற்றுலா பயணிகள்: பெரு அரசு எச்சரிக்கை

தென் அமெரிக்காவில் உள்ள பெருநாட்டில் உலக அதிசயங்களில் ஒன்றான ‘மச்சு பிச்சு’ உள்ளது. இது உருபம்பா மாகாணத்தில் கஸ்கோ பகுதியில் உள்ள மலை உச்சியில் 7,970 அடி...

Close