பிந்து மாதவியுன் கண்ணுல ஆபாசம் இல்லே….

பிந்து மாதவியின் அழகுதான் இப்போது விலைவாசியை விட வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தில் மேலும் ஒரு சிட்டிகை அழகை அள்ளிப் போட்டிருக்கிறது தேசிங்கு ராஜா படத்தின் வெற்றி. சென்னையில் நடந்த இப்படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட பிந்து, தங்கிலீஷில் பிளந்து கட்டினார். நான் நடிச்ச கேடி பில்லா கில்லாடி ரங்கா படமும் ஹிட். தொடர்ந்து வந்த இந்த படமும் ஹிட். ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றவர், விமலை புகழ்ந்து பாமாலை படிக்காத குறைதான். எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையா பழகுவார். ஷுட்டிங் ஸ்பாட்டில் விமல், சூரி, சிங்கம்புலி அண்ணே, ரவி மரியா அண்ணே ஆகியோர் அடிச்ச அரட்டை என்னை சந்தோஷமா வச்சுருந்துது என்றார் பிந்து மாதவி. (அண்ணேவிலிருந்து தப்பித்த விமல் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்)

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த வினு சக்கரவர்த்தி பேச ஆரம்பித்ததும் பிந்து மாதவி முகத்தில் அநியாயத்துக்கு வெட்கம். பிந்து மாதவிக்கு என் மகள் வயசுன்னு கூட சொல்ல மாட்டேன். பேத்தி வயசு அவருக்கு. அவரோட கண்கள் சில்க் கண்கள் மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. இந்த கண்ணுல ஆபாசம் இல்லே.

ஒரு ஷாட்ல ஆரஞ்சு பழங்கள் மத்தியில் அவரது முகத்தையும் கண்களையும் குளோஸ் அப்பில் காட்டுவாங்க. இன்னொரு முக்கியமான விஷயம், இந்த பொண்ணு ஆபாசமா டிரஸ் பண்ணுறதில்ல. அதனால் நம்பி பேரப் பிள்ளைகளை அழைச்சிட்டு போகலாம். சில பிள்ளைகள் படம் பார்த்துகிட்டு இருக்கும்போதே எதையாவது ஒன்றை காட்டி அது என்ன தாத்தா என்பார்கள். நாம என்னன்னு சொல்றது? அந்த பிரச்சனையெல்லாம் பிந்து மாதவி படங்களில் இல்லை. அதுக்காக அந்த பொண்ணை பாராட்டுறேன் என்றார் வினு சக்கரவர்த்தி. அப்படியே அவர் சொன்ன இன்னொரு மேட்டர் விமலை ஜிவ்வென்று ஆக்கியிருக்கும்.

அந்தகாலத்துல எம்ஜிஆர் – சிவாஜி ரெண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு ஹிட் கொடுப்பாங்க. ஆனால் சைலண்ட்டா நடுவில் புகுந்து ஹிட் கொடுப்பார் ஜெமினி கணேசன். அந்த மாதிரி அலட்டிக்காம அமைதியா ஹிட் கொடுக்கிற சின்ன ஜெமினிதான் நம்ம விமல் என்றார் வினு சக்கரவர்த்தி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிந்து மாதவியுன் கண்ணுல ஆபாசம் இல்லே….

பிந்து மாதவியின் அழகுதான் இப்போது விலைவாசியை விட வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தில் மேலும் ஒரு சிட்டிகை அழகை அள்ளிப் போட்டிருக்கிறது தேசிங்கு ராஜா படத்தின்...

Close