பியூஸ்சை புடுங்கிட்டேன்… -பவருக்கு என்ட் கார்டு போட்ட சந்தானம்
பவர்ஸ்டார் சீனிவாசனின் பெருமை, சட்டீஸ்கர் வரைக்கும் பரவி விட்டது. இதனால் ரொம்பவே உஷாரானவர் பவரல்ல, சந்தானம்தான்!
சமீபத்தில் இவரிடம் பேசிய ஒரு இயக்குனர், அதான் பவர்ஸ்டார் வெளியில் வந்துட்டாரே, மறுபடியும் உங்க ரெண்டு பேரையும் வச்சு கண்ணா லட்டு திங்க ஆசையா மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் பண்ணலாமா என்றாராம். அவர் விஷயத்தில் நானே பியூஸ்சை புடுங்கிட்டேன். நீங்க ஏன் இன்னும் கம்பிய கையில புடிச்சுகிட்டு திரியுறீங்க என்று சந்தானம் கேட்க, அதை காமெடி என்று நினைத்து மற்றவர்கள் சிரித்தார்களாம்.
யோவ்… நான் சீரியசாதான் சொல்றேன் என்றாராம் சந்தானம். ஆக, இப்போதைக்கு சாப விமோசனமும் இல்லை, சந்தான விமோசனமும் இல்லை பவருக்கு!