பிரபல நட்சத்திர ஓட்டலில் ரகளை, கலாட்டா… – வெட்கத்தை தொலைத்த ‘ஹிட்’ ஹீரோ!
கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கலாட்டா இது. அதுவும் சென்னையிலிருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றின் ரிசப்ஷனில். அண்மையில் உதயமான ஒரு சேனலின் சார்பாக நடத்தப்பட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டார் கலைஞானி கமல். இவர் மட்டுமல்ல, தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்களும் ஹீரோயின்களும் கூட அங்கே வந்திருந்தார்கள். வாழ்த்தி பேசிவிட்டு அவர் கிளம்பிவிட்டாலும், அவரைப் போலவே அங்கு வந்திருந்த பல நட்சத்திரங்கள் மட்டும் கிளம்பவே இல்லை. காரணம் நிகழ்ச்சி முடிந்ததும் கொடுக்கப்பட்ட கிராண்டான பார்ட்டி. அதில் கலந்து கொண்ட சிலர் அளவாக ‘நீராகாரம்’ அருந்திவிட்டு சட்டுபுட்டென கிளம்பிவிட, தொடர் ஹிட்டுகள் கொடுத்து வரும் ஒரு ஹீரோ மட்டும் கிளம்பவே இல்லை.
அதில் தவறென்ன இருக்கிறது? அவரது ‘கொள்ளளவு’ கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்திருக்கும். அனுபவித்துவிட்டு போகட்டுமே? இப்படிதானே நினைக்க தோன்றுகிறது. ஆனால் அங்கு நடந்ததே வேறு என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத நட்சத்திர ஓட்டல் பணியாளர்கள். ஓரளவு நிதானத்துடன் வந்த அந்த ஹீரோ ரிசப்ஷனில் வந்து அமர்ந்து கொண்டாராம். சரக்கை இங்கே கொண்டா என்று சர்வர்களுக்கு கட்டளையிட, ‘சார் இது ரிசப்ஷன்… நீங்க குடிக்கணும்னா பார்ட்டி ஹாலுக்கு போங்க. இல்லேன்னா பாருக்கு போங்க’ என்று அவர்கள் அட்வைஸ் செய்தார்களாம்.
‘டேய்… நான் யார்னு தெரியுமா? தமிழ்சினிமாவுல தொடர்ந்து அஞ்சு ஹிட் கொடுத்தவன். எங்கிட்டேவோ? வேற எவனாச்சும் என்னைய மாதிரி ஹிட் கொடுத்தவன காட்டு பார்க்கலாம்’ என்று குதிக்க ஆரம்பித்தாராம்.
சாப்பாடு இந்த டேபிளுக்கு வரணும் என்று கூச்சலிட்டவரை அங்கு தங்கியிருந்த வெளிநாட்டு பயணிகள் இகழ்ச்சியோடும் நடுக்கத்தோடும் கவனிக்க, ஆடிப்போனது ஓட்டல் நிர்வாகம். வேறு வழியில்லாமல் சாப்பாட்டை அங்கேயே கொண்டு வந்து பரிமாறினார்களாம். அதற்கப்புறமும் அடங்காதவர் சிக்கன்களை அள்ளி நாலாப்புறமும் வீசினாராம். இப்படியே நள்ளிரவு ஒரு மணி வரை தொடர்ந்ததாம் அவரது அட்டகாசம். இந்த அட்டூழியங்களை செல்போனில் புகைப்படம் எடுத்த ஓட்டல் நிர்வாகம் அன்றிரவே சம்பந்தப்பட்ட சேனல் ஹெட்டுக்கு அவற்றை அனுப்பியிருக்கிறது.
‘உங்க கெஸ்ட் இப்படி பண்ணிட்டாரு. உங்களால் எங்க ஹோட்டலே நாறிப்போச்சு. இனிமே ஏதாவது விழா, பார்ட்டின்னா வேற இடம் பாருங்க’ என்று கூறிவிட்டாராம் அவர்.
நடுவுல கொஞ்சம் பக்கம் காணாம போகலாம். வெட்கம் காணாமல் போனால் அது நல்ல ஹீரோவுக்கு அழகே இல்லை. வளர்ற நேரத்துல இதை மட்டுமாவது புரிஞ்சுக்கோங்க பிரதர்…
Ruckus in Star Hotel by an upcoming ‘Hero’
Few days ago a new TV channel was launched in a Star Hotel where Ulaganayagan Kamal was the Chief Guest. Many leading actors and actresses and members of the film fraternity participated in the event. Soon after the event, while Kamal and other guests have started back home, many of the upcoming artistes including an upcoming hero who gave serial hits enjoyed the party served there. Little the Hotel staff realise that the party would have become a nightmare for them. After clearing some ‘rounds’ our hero went straight to Reception longue and shouted at the staff to bring in ‘drinks’ and ‘food’ at the Reception, and the staff request to go to Bar or the Restaurant went to deaf ears. This ruckus was going on till 1 a.m. in the morning. The management of the Hotel have already sent the photos of the ruckus indulged by one of the star guest to the TV channel for appropriate action. Doing a ‘hero’ role in films and giving hits consecutively are of course an achievement, but practising the ‘hero’s standards in real life is much more important than the reel life, dear ‘Hero’ sir.