பிரபாகரனின் கம்பீரத்தை காப்பாற்றுமா இந்த சினிமா?

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் கதையை இங்கு படமாக்குகிற துணிச்சல் யாருக்கும் இல்லை. அப்படியிருந்தாலும் அதை சென்சாரில் காட்டி சேதமில்லாமல் வெளியே எடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கை துளியும் கிடையாது யாருக்கும். எத்தனை கோடி வேண்டுமானாலும் கொட்டலாம். ஆ னால் அதை திருப்பி எடுக்கிற உத்தரவாதம் இல்லையே என்கிற தவிப்பிலேயே அந்த மாபெரும் தலைவனை பற்றிய முறையான பதிவுகள் இங்கே படமாக வந்ததில்லை. வரப்போகிற காலம் எப்போது என்றும் தெரியவில்லை.

இந்த நிலையில் ‘புலிப்பார்வை’ என்றொரு படத்தை தயாரிக்கிறது வேந்தர் மூவிஸ் நிறுவனம். பிரபாகரனின் மகன் பாலசந்திரன் பார்வையில் நகர்கிறதாம் இந்த படத்தின் கதை. பாலசந்திரன் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காட்சியும், அந்த சிறுவனை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்ற காட்சியையும் கண்டு உலகமே கலங்கி நின்றதே, அந்த சம்பத்தை முன்னிறுத்திதான் இப்படியொரு கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். முன்ஜாக்கிரதையாக இந்த படத்திற்கு பெருமளவு பணத்தை இறைக்காமல் சில லட்சங்களில் முடித்துவிடும் திட்டத்தோடு படப்பிடிப்புக்கு கிளம்பியிருக்கிறார்கள். ஒருவேளை சென்சார் அனுமதித்தால் சரி. இல்லையென்றாலும் சிறிய காயத்தோடு தப்பித்துக் கொள்ளலாமே என்கிற திட்டம்தான் இது.

இந்த படத்தில் பிரபாகரனின் கேரக்டரில் அனுபவம் மிக்கவரை நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர் விரும்ப, தயாரிப்பாளரான வேந்தர் மூவிஸ் மதன் ‘நான்தான் நடிப்பேன்’ என்று அடம் பிடிக்கிறாராம். வேறு வழியில்லாமல் அவரையே நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர்.

பிரபாகரனின் கம்பீரத்தையும் மிடுக்கையும் காப்பாற்றுவாரா மதன்? அதுதான் பெரும் கேள்வியாக சுற்றி வந்து பீதி கிளப்பிக் கொண்டிருக்கிறது.

Vendhar Movies Madhan to don as Prabhakaran

It is well known that LTTE supremo Prabhakaran’s story is an apt one for film making. However makers here in south do not have confidence as to how the film will be accepted by the audience. Also if the Censors would allow the film to be released is a debatable proposition. However Vendhar Movies are coming out with a film loosely based on Prabhakaran’s son Balachandran. The director has weaved a story from the youngster’s point of view on Sri Lankan war with LTTE. Though the director wanted to cast someone who has experience, Vendhar Movies Madhan has insisted that he would don the role of Prabhakaran in the film. The director finally acceded to the request.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இதுதான் ‘ ஜெய் ’ ராசி அலறும் ஹீரோயின்கள்

நஸ்ரியாவின் கல்யாண செய்தி இன்டஸ்ரி ஹீரோக்கள் சிலருக்கு ‘வட போச்சே...’ ரகமாகிவிட்டது. அதிலும் அவர் கட்டிக் கொள்ளப் போகும் பகத் பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் 12 வயசு இடைவெளியாம்....

Close