பிரபாகரன் கேரக்டரில் நான் நடிக்கிறேன்..! பீதி கிளப்பிய இயக்குனர்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக கூறியிருக்கிறார் இயக்குனர் வ.கௌதமன். பிரபாகரனை போன்ற மாவீரர்களின் கதையை படமாக்க வேண்டுமெனில் அதை பட்ஜெட் படமாக எடுத்தால் சுத்தப்படாது என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். இருந்தாலும், இப்போதிருக்கிற சூழலில் ஏதோ தன்னாலான முயற்சி என்கிற அளவிலேயே இந்த படத்திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார் அவர்.

தமிழ்சினிமா ஹீரோக்கள் பலரையும் தன் தனிப்பட்ட துணிச்சல் மூலமே கவர்ந்திருக்கிறது அவரது பெயர். ஆனால் ‘பிரபாகரன் கேரக்டரில் நடிக்க வர்றீங்களா?’ என்று எவரை அழைத்தாலும், ‘ஆளை விடுங்கப்பப்பா’ என்று ஓடுகிறார்களாம். இதனால் நொந்தே போய்விட்டார் வ.கௌதமன். ‘யாரும் கிடைக்கல. அதனால் நானே நடிக்க வேண்டியதாப் போச்சு’ என்று இவரே கிளம்பாமல் இருக்க வேண்டுமே என்று பிரார்த்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள் பிரபாகரனின் அபிமானிகள் பலரும். இவர்கள் எல்லாரும் தங்கள் அடிவயிற்றில் இப்படியொரு நெருப்பை கட்டிக் கொண்டிருக்க, அந்த நெருப்பில் ஒரு கேன் பெட்ரோலை ஊற்றுவார் போலிருக்கிறது இயக்குனர் இமயம் பாரதிராஜா.

சமீபத்தில் இவரிடம் பேசிக் கொண்டிருந்த கௌதமன், பிரபாகரனின் கதையை படமாக எடுப்பதாகவும், அதில் யாரும் நடிக்க வர மாட்டேங்கிறாங்க என்றும் புலம்பினாராம். ‘யாரும் நடிக்கலேன்னா என்னய்யா? நான் நடிக்கிறேன். எப்போ ஷுட்டிங்? சொல்லு’ என்றாராம் இமயம். இந்த பதிலை கேட்டு இதயமே வெடித்துவிடுகிற அளவுக்கு போன இயக்குனர் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தாராம்.

Prabhakaran’s life history to be made into film

V. Gouthaman is planning to take a film on LTTE supremo Prabhakaran’s life history. While he has announced the film, he found it difficult to cast a suitable actor or a director to don the role of Prabhakaran, as no one dares to take it, Gouthaman says. Obviously no person would like to risk his career as the film will have political repercussions. However when Gauthaman was mentioning about this to veteran director Bharathiraja, he immediately agreed to don the role, though Gouthaman has felt differently.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சம்பளத்தை விட்டுக்கொடுத்த விமல்!

கடைஞ்ச மோரை, உடைஞ்ச பானையில ஊற்றி வச்ச மாதிரியே நடக்கிறது விமலுக்கு எல்லாமும். இவருக்கு பின்னால் வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரும் இவர் டிராவல் பண்ணிய...

Close