‘பிரேக் அப்’ ஆனதால்தான் இந்த ‘பேட்ச் அப்!’ – சிம்பு-நயன் விவகாரத்தில் நடந்தது என்ன?

சிம்பு படம் என்றாலே சிக்கல்களுக்கு பஞ்சமில்லை என்கிறது முன்னோர் ஃபார்முலா. பாண்டிராஜ் இயக்கும் படத்திற்கும் அப்படியோரு சிக்கல் வந்து மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறது படம். இந்த படத்திற்காக சிம்பு கொடுத்திருந்த கால்ஷீட்டை அப்படியே எடுத்து கவுதம் மேனனுக்கு கொடுத்துவிட்டார். படப்பிடிப்பு நிறுத்தம் என்று சில தினங்களுக்கு முன் நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதில் அரை சதவீதத்தை மட்டும் ஒப்புக் கொண்டார் பாண்டிராஜ்.

படம் நிறுத்தப்படவில்லை. படப்பிடிப்பும் நிறுத்தப்படவில்லை. சிம்பு போர்ஷன் தவிர்த்து அவரது அப்பா (டி.ஆர் அல்ல) போர்ஷன் எடுக்கப்பட்டு வருகிறது என்று விளக்கம் அளித்திருந்தார். கதாநாயகியையும் தேடி வருகிறோம். இரு தினங்களில் யார் ஹீரோயின் என்பதை அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையில் நயன்தாராவின் பிறந்த நாள் வந்தது சிம்புவுக்கும் பாண்டிராஜுக்கும் வசதியாக போய்விட, மனசு நிறைய வெள்ளைக் கொடியுடன் சிம்புவும், அசத்தலான கதையுடன் பாண்டிராஜும் கிளம்பி நேரடியாக அவரை சந்திக்க போனார்கள். பொக்கே பரிமாற்றங்களுக்கு பின், தான் வந்த விஷயத்தை ஓப்பனாகவே பேச தொடங்கினார் பாண்டிராஜ். சிம்பு நடிக்கும் படத்தை நான் இயக்குவதை நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. அதில் நீங்க நடிச்சா நல்லாயிருக்கும் என்று கூற, முதலில் தயங்கினாராம் நயன்தாரா.

கதையை கேளுங்க. பிடிச்சிருந்தா நடிங்க. இல்லேன்னா வேணாம் என்று பாண்டிராஜ் அழுத்தம் கொடுக்க, கதையையும் கேட்டிருக்கிறார் நயன். அதற்கப்புறம்தான் சரி என்று சம்மதித்தாராம். வெறும் கதைக்காக மட்டும்தான் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டாரா? அல்லது வேறு ஏதாவதுமா?

கதைக்காக மட்டுமல்ல, சுமார் ஒன்றே கால் கோடி ரூபாய் இப்படத்திற்காக சம்பளம் தர ஒப்புக் கொண்டாராம் சிம்பு. (இவரது சொந்தப்படம்தானே, அதனால் சம்பளத்தை பற்றி சிம்பு பேசுவதுதானே முறை?) இதைவிட முக்கியமான விஷயம், சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் பிரேக் அப் ஆகிவிட்டது என்கிற உண்மை பிரேக் அப் ஆன அடுத்த வினாடியே நயன்தாராவுக்கு தெரிந்திருந்தது. அதனாலும் கூட இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அவர்.

இந்த படத்திற்கு இனி பிரமோஷன் செய்வதற்கு பத்து பைசா கூட சிம்புவோ, அவரது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனமோ செலவழிக்க தேவை இருக்காது. ஏனென்றால் அந்த வேலையை மீடியாவே பார்த்துக் கொள்ளும். சிம்புவும் நயன்தாராவும் இணைகிறார்கள் என்றால், சலசலப்புக்கு பஞ்சமும் இருக்காது. செய்திகளுக்கு சுவாரஸ்யமும் குறையாது. இனி குறைந்தது ஆறு மாதத்திற்கு கோடம்பாக்கம் முழுக்க டிசம்பர் கச்சேரிதான்…

முக்கிய குறிப்பு- இந்த படம் துவங்கி சில நாட்கள்தான் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அதற்குள் பெருந்தொகை ஒன்றை முடிவு செய்து இப்படத்தை வாங்கிவிட்டதாம் சன்.

Simbu and Nayanthara unites as Hansika takes the break!

Kollywood is abuzz with Simbu and Nayanthara are reunited for Pasanga Pandiaraj’s next untitled film, which is said to be a romantic one, if one goes by Simbu’s version.

Sometime back Pandiaraj was a worried man for two reasons, one Simbu stopped shoot of the film, and the other he could not find an angel for his film to pair with Simbu. However, Nayan’s birthday came in handy for both of them. Both Simbu and Pandiaraj met with Nayan on her birthday, exchanged pleasantries. Pandiaraj asked Nayan, wth a bit of hesitation, if she could act with Simbu in his film. He narrated the script to her and told her if she likes it, she is welcome to join the team.

Simbu from his side, both as the hero of the film, and as a producer, offered Nayan 25% more on her regular salary. The script, the hike in salary and more than that ‘break-up’ of Simbu-Hansika relationship must have prevailed upon Nayan, to give her nod to the project. So here comes to beginning of the second innings of Nayan and Simbu …..

Now media will have flurry of activities as the two join together, stories will be aired and published quite frequently now. Simbu and Pandiaraj can heave a sigh of relief on publicity as they would get free publicity for the film, now.

Incidentally it is said that Sun Network has already advanced funds for acquiring the satellite rights for the film, which again is a bonus for Simbu in marketing matters.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வால்ட் டிஸ்னி கதையில் அஜீத்!

ராஜா ராணி இயக்குனர் அட்லீயை கொஞ்ச நாட்களாக எங்கு தேடியும் காணக் கிடைக்கவில்லை என்கிறார்கள். அவரோ அடுத்த படத்தின் டிஸ்கஷனுக்காக சென்றிருக்கிறாராம். பொதுவாக ஒரு பெரிய ஹீரோ...

Close