பிளஸ்–2 கணித தேர்வில் 2 வினாக்கள் தவறானது: மதிப்பெண் வழங்க கோரிக்கை

பிளஸ்–2 கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நேற்று நடைபெற்றன. கணிதப் பாடத்தில் 200–க்கு 200 மதிப்பெண்கள் முழுமையாக அதிக மாணவர்கள் எடுப்பது வழக்கம். இந்த ஆண்டும் கணித தேர்வு எளிமையாக இருக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் 2 கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ– மாணவிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் 2 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

ஒரு மதிப்பெண் வினா பகுதியில் 4–வது கேள்வி அணியின் தரம் ‘ரோ’ என்ற கணித குறியீட்டுக்கு பதிலாக ஆங்கிலத்தில் ‘பி’ என்று அச்சிடப்பட்டு இருந்தது. இது அச்சு பிழையாகும்.

6 மதிப்பெண் பகுதி பி–யில் 47–வது கேள்வியில் அச்சிபிழை ஏற்பட்டு இருந்தது. இந்த கணக்கை செய்தால் விடை கிடைக்கும். 41–வது கேள்வி புத்தகத்தின் அடிப்படையில் இருந்து கேட்கப்படும் கேள்வி. ஆனால் வெளியில் வினா கட்டமைப்பில் இருந்து கேட்கப்பட்ட கேள்வியாகும். ‘லிமிட்’ பகுதியில் இருந்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதிலும் அச்சிபிழை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த 2 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநில செயலாளரும் கணித ஆசிரியருமான செ.வின்சென்ட் கூறியதாவது:–

கணித வினாத்தாளில் 2 கேள்விகள் பிழைகள் உள்ளன. இதனை எழுத முயற்சி செய்தாலே முழு மதிப்பெண் வழங்க வேண்டும். 7 மதிப்பெண்கள் குறைந்தால் மாணவர்களின் கட்–ஆப் மதிப்பெண் 3.5 குறைந்துவிடும். எனவே 2 வினாக்களுக்கும் முழு மதிப்பெண் அளிக்க தேர்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read previous post:
Elite Women’s Club was inaugurate.Photos. I

[nggallery id=351]

Close