பி.சி.ஸ்ரீராம் சார் பாராட்டினார்… ‘ஹலோ’ கந்தசாமி நெகிழ்ச்சி

வீரம் படத்தில் ஒரு கூலித் தொழிலாளியை சுருக்கு கயிற்றில் மாட்டி தொங்க விடுவார்களே, அந்த தொழிலாளியை நினைவிருக்கிறதா? அவர்தான் ‘ஹலோ’ கந்தசாமி. இதுவரை சுமார் பதினெட்டு படங்களில் நடித்திருக்கும் கந்தசாமி, இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வரக்கூடிய நேரம் காலம் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது. ஏன்? அவர் நடித்து வரும் படங்கள் அப்படி.

நிமிர்ந்து நில், பிரம்மன், சிப்பாய், ஷங்கரின் ஐ என்று போகிறது அந்த லிஸ்ட்.

இந்த படங்களுக்கு முன் அவர் நடித்த படங்கள் எல்லாமே அநேகமாக வெற்றிப்படங்கள். பூ, வம்சம், மைனா, வாகை சூடவா, சாட்டை, குட்டிப்புலி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், வீரம்!

வெறும் கந்தசாமி, ‘ஹலோ’ கந்தசாமி ஆனது பூ பட இயக்குனர் சசியால்தான். அடிப்படையில் நாடக கலைஞரான இவரை பூ பட நேரத்தில் சந்தித்தாராம் சசி. ‘எங்க ஊர்ல ஒருத்தர் சிகையலங்கார கடை வச்சுருக்கார். அவரு எப்போதும் எல்லாரையும் ஹலோ போட்டுதான் கூப்பிடுவாரு‘ என்று கூறிய கந்தசாமி அதை அப்படியே நடித்துக் காட்ட, படத்திலும் அப்படி ஒரு ரோல் வைத்துவிட்டார் சசி. டீக்கடைக்கு வருகிறவர்களையெல்லாம் ‘ஹலோ’ சொல்லி அழைப்பார் கந்தசாமி. இப்போது எல்லா பட டைட்டில்களிலும் இடம் பிடித்துவிட்டது இந்த ‘ஹலோ’பட்டம். துத்துக்குடி மாவட்டம் சூரங்குடி கிராமத்தில்இயங்கி வரும் கூட்டுறவு வங்கியில் இப்போதும் உதவி செயலராக பணியாற்றி வரும் கந்தசாமிக்கு, பாதி நேரம் சினிமா. மீதி நேரம்தான் கூட்டுறவு வங்கி என்று ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.

கடந்த 21 வருடங்களாக சொத்தை விற்று, வருகிற சம்பளத்தையெல்லாம் கொட்டி நாடகம் நடத்தி வந்தவர் கந்தசாமி. தென்பகுதியில் பிரபலமாக விளங்கும் முருகபூபதி நாடக பட்டறை உருவாக காரணமாக இருவர்களில் கந்தசாமியும் ஒருவர். ஞானசம்பந்தன் தலைமையிலான மதுரை நகைச்சுவை மன்றம், அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற முக்கியமான இடங்களில் இவரது பங்கும் இருந்து வருகிறது.

பல படங்களில் துணை நடிகராகவே வந்து போகும் கந்தசாமி முக்கியமான நடிகராக மாறி வரும் காலகட்டம் இது. கண்களில் ஆர்வம் மின்ன பேச ஆரம்பிக்கிறார் ஹலோ கந்தசாமி-

எனக்கு சொந்த ஊர் பரமக்குடி பக்கத்துல இருக்கிற பெருநாழி கிராமம். வெறும் நாடகத்தோட என் கனவு முடிஞ்சுரும்னு நினைச்ச நேரத்தில்தான் டைரக்டர் சசி சார் என்னோட கதவுகளை திறந்துவிட்டார். அதற்கப்புறம் நிறைய படங்களில் நடித்திருக்கேன். ‘சாட்டை’ படத்தில் செவிட்டு வாத்தியாராக நடித்துக் கொண்டிருந்தேன். என் நடிப்பையும் என்னோட ஸ்பெஷலான குரலையும் கேட்டு என்மீது அன்பு கொண்ட சமுத்திரக்கனி சார், ‘அண்ணே உங்களை ஒரு போட்டோ எடுத்துக்குறேன். தேவைப்படுற போது கூப்பிடுறேன்’ என்று தன்னிடமிருந்த செல்போன்ல போட்டோ எடுத்துகிட்டார். அவர் சொன்ன மாதிரியே நிமிர்ந்து நில் படத்தில் எனக்கு ஒரு முக்கியமான ரோல் கொடுத்திருக்கிறார்.

ஆக்கி என்ற படத்தில் நடிச்சுட்டு இருக்கும்போது நடந்த சம்பவமும் ரொம்ப நெகிழ்ச்சியானது. அந்த படத்தில் அனுஹாசன்தான் முக்கியமான ரோலில் நடிக்கிறாங்க. என்னோட சொந்த ஊருதான் அவங்களுக்கும். இதை கேள்விப்பட்டவுடன், ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து சாருஹாசன் சாருக்கு போன் அடிச்சு என் கையில் கொடுத்துட்டாங்க. எனக்கு கையெல்லாம் நடுங்கிருச்சு. நான் சிறு வயதில் அவரை பிரமிப்பாக கேள்விப்பட்டிருக்கேன். எங்க ஊர் தலைவர்களுக்கெல்லாம் அவர்தான் வழக்கறிஞரா இருந்திருக்காரு. அவரே என்னிடம் பேசியதும், ஊர்ல ஒவ்வொருத்தர் பேரா சொல்லி விசாரித்ததும் அற்புதமான அனுபவம்.

ஐ படத்தில் நடிக்கும்போதும் அப்படியொரு சிலிர்ப்பு ஏற்பட்டுச்சு எனக்கு. ஷங்கர் சார் டயலாக்கை சொல்லி கொடுத்துட்டு உங்க பாடி லாங்குவேஜ்லேயே நடிங்க. பார்க்கலாம்னு சொன்னார். நான் நடிச்சு காட்டினதும் ‘நல்லாயிருக்கு. அதையே செஞ்சுருங்க’ என்றார். ஷாட் முடிஞ்சதும், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சார் என்னிடம் ‘நல்லா நடிச்சிங்க’ என்றார். நான் அப்படியே ஆடிப்போயிட்டேன். அவர் அனுபவத்துக்கு முன்னாடி நான் எம்மாத்திரம்? அவரே பாராட்டினார் என்றால்? ஏதோ நான் புண்ணியம் பண்ணியிருக்கேன்னுதான் நினைக்கிறேன்.

சாட்டை படத்தில் தம்பி ராமய்யா சாருடன் சேர்ந்து நடித்ததையும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சத்யராஜ் சாருடன் நடித்ததையும் என்னால மறக்கவே முடியாது. அவங்கள்லாம் பெரிய ஜாம்பவான்கள் என்று கூறிய ஹலோ கந்தசாமி, ‘லாஸ் ஆஃப் பே’ அடிப்படையில்தான் வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு சென்னைக்கு ஷூட்டிங்குகளுக்காக வந்து போய் கொண்டிருக்கிறார்.

இனி ‘மாஸ் ஆஃப் கெயின்’ தான் கந்தசாமி!

‘Hello’ Kandasamy is on ‘firm’ footing now!

‘Hello’ Kandasamy has got the surname ‘Halo’ through director Sasi in the film ‘Poo’. When he met the director for a chance in the film, Sasi asked him to enact a scene in which he seems to have spoken the dialogue starting with ‘hello’. Since then ‘hello’ has been retained with his name. He has acted since Poo, over a dozen films, almost all of them were hits, including the recent one Veeram.

Speaking about his entry in films, subdued Kandasamy said that director Sasi has only helped in making the entry into the film, when he thought his theatre experience is over and took over a job in the local co-operative bank as Asst. Secretary. Poo opened floodgates for me and I had acted in small roles in several films later. Samuthirakani who happened to see me asked me if he could take a photo of him so that he would call him whenever there is a chance to cast him in his film. He honoured his commitment by calling me to do an important role in Nimirndhu Nil.

He recalled an incident with emotion when he narrated that during the shooting of ‘Hockey’. Anu Hassan who was shooting learnt that I belonged to Paramakudi and immediately called her father Charu Hassan and gave the phone to him. Her father enquired every person in the village was a pleasant experience, he said.

On another occasion, director Shankar who asked me to enact the scene in my own style for the film ‘Ai’ was impressed with my acting. Immediately after the shoot camera person PC Sriram came to me and appreciated me saying that you have acted nicely.

He said acting with Thambi Ramaiah and Sathyaraj in Sattai and Varuthapadatha Valibar Sangam are memorable experience. He is currently taking leave for his work on ‘loss of pay’ and participates in the shooting.

We wish soon he will become a full time actor!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ ஈழத் தமிழர்களை வச்சு அரசியல் பண்ணாதீங்க… ’ ராஜ்கிரண் கொந்தளிப்பு

‘கழுகு’ படத்தின் போதே கவனிக்கப்பட்டவர் டைரக்டர் சத்யசிவா. இவரது அடுத்த படைப்பான ‘சிவப்பு’ வெளிவரும்போது சில அரசியல்வாதிகளின் முகம் வெளுத்துப் போனாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அவர் எடுத்துக்...

Close