பீலா வாசுவானார் பி.வாசு – கொந்தளிக்கும் ஐஸ்வர்யாராய்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானாகிவிட்டார் பி.வாசு. எத்தனையோ ஹிட்டுகள் கொடுத்த டைரக்டருக்கு இப்படியொரு நிலையா என்று பரிதாபப்படுவதா? இந்த வயசுல உங்களுக்கு இந்த அவமானம் தேவையா என்று கோபப்படுவதா? புரியாமல் தவிக்க வைத்திருக்கிறார் ரசிகர்களை.
கடந்த சில மாதங்களுக்கு முன் சோனம் கபூருக்கு கதை சொல்லியிருக்கிறேன். என் அடுத்த படத்தின் ஹீரோயின் அவர்தான் என்றார். ராஞ்சனா பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து கேள்வி கேட்ட நிருபர்களிடம், அப்படி யாரும் எங்கிட்ட வந்து கதை சொல்லவேயில்ல என்று கூறி பி.வாசுவின் பொய்யை வெட்ட வெளிச்சமாக்கினார் அவர். இப்போது மீண்டும் ஒரு முறை அதே மாதிரி சிக்கல் பி.வாசுவுக்கு. கடந்த சில தினங்களுக்கு முன் அவரது தரப்பிலிருந்து ஒரு அதிகாரபூர்வமான பிரஸ் ரிலீஸ் வெளியிடப்பட்டது. அதில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் நடிக்கும் அனிமேஷன் படம் ஒன்றை எடுக்கவிருப்பதாகவும் அந்த படத்திற்கு ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார் பி.வாசு.
இந்த படத்தில் ஐஸ்வர்யா வாள் சண்டை போடுவதாகவெல்லாம் கூறப்பட்டிருந்தது. இந்த செய்தி எல்லா ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு எப்படியோ ஐஸ்வர்யாவின் காது வரைக்கும் போய்விட்டது. இன்று மும்பையில் நிருபர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் அவர், நான் அப்படியெல்லாம் ஒரு படத்திலும் நடிக்கல. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் இயக்குனர் யாரென்றே தெரியாது. தினம் நாற்பது பேராவது என்னை வச்சு படம் பண்ணனும்னு வர்றாங்க. மரியாதை நிமித்தமா சிலரை நேர்ல சந்திக்கிறேன். இதையே அட்வான்சா எடுத்துகிட்டு நான் அவங்க படத்துல நடிக்கறதா சொல்வது சரியல்ல என்று கூறியிருக்கிறார்.
மறுபடியும் ஒரு முறை பீலா வாசுவாகி நிற்கிறார் பி.வாசு.
Aishwarya Rai pooh-poohs director Vasu’s statement?
Director Vasu one of the best film makers in south film industry had issued a press statement saying that he met Aishwarya Rai and narrated his script ‘Aishwaryavum Ayiram Khakkavum’ and she had given her consent to do the film. He has already made arrangements for best animatronics team from France for the film. He had even released a photo with Aishwarya Rai’s animated image riding a horse. The statement was published very widely across India, since last two days.
Having learnt about it, Aishwarya Rai Bachchan had told reporters, “ On daily basis least 40 people wanted to meet me with scripts to cast me, and due to courtesy I give consent to listen to scripts of few. But I have never heard of such director nor do I know him. Just because I had listened a script does not mean that I had consented nor should one take advantage of such courtesy visits, she added.
This is not the first occasion for the director to have such an insult. Some time back he told reporters that he had told a story to Sonam Kapoor and she had agreed to do his film. However Sonam Kapoor refuted the reports saying that no one had told any story to her.
While we sympathise with director Vasu’s predicament, we really wonder why he should be subjected to such ridicule.