புதிய எந்திரத்தில் துண்டுச்சீட்டு: வாக்களித்ததை தவறாக காட்டினால் புகார் செய்யலாம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த புதிய கருவியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது அந்த கருவியில் அச்சாகி துண்டுச் சீட்டு வெளிவரும்.

மத்திய சென்னை தொகுதியில் இந்த எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. அந்த எந்திரம் நாம் வாக்களித்ததை தவறாக காட்டினால் வாக்காளர்கள் புகார் செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புகார் செய்யப்பட்டால் அந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் பரிசோதனைக்காக வாக்குப்பதிவு செய்யப்படும். இதன்மூலம் அந்த புகார் உண்மையா? இல்லையா? என்பது தெரிந்துவிடும். ஒருவேளை வாக்காளர்கள் பொய் புகார் கொடுத்தால் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 177-ன் கீழ் பொய்யான தகவல் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அந்த அதிகாரிகள் கூறினர்.

வாக்காளர்களை அச்சமூட்ட நாங்கள் விரும்பவில்லை, அந்த பிரிவில் தண்டனை என்பது அரிதானது தான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு: பக்தர்கள் கடும் அவதி

திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு இப்போது தலைதூக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் நிலைமை மேலும் மோசமாகும் என கருதப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் 80 ஆயிரம்...

Close