புதுமுக நாயகனுடன் மகிமா நடிக்க “அகத்திணை”

ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு அகத்திணை என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் நரேன்,ஜி.எம்.குமார், ஜார்ஜ், லொள்ளுசபா.மனோகர், சுவாமிநாதன், நளினி, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராமச்சந்திரன்,பிளாக்பாண்டி, பக்கோடா பாண்டி, சிவாநாராயணமூர்த்தி, அல்வாவாசு, மாஸ்டர்அதித்யா, செந்தில்குமார், பூவிதா, ரேவதி பாட்டி, செல்வி, ஹரிணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

தயாரிப்பாளர் T.R.ஸ்ரீகாந்த் அவர்கள் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் சின்னத்திரையில் சன் டிவியில் ஒலிபரப்பாகி பெண்களின் ஆதரவைப்பெற்ற “அத்திப்பூகள்” என்ற வெற்றி தொடரை இயக்கியவர் படம் பற்றி இயக்குனர்….எனக்கு சின்னத்திரையில் அத்திப்பூகள் மூலமாக ஆதரவு கொடுத்த மக்கள் வெள்ளித்திரையில் “அகத்திணைக்கும் ஆதரவு கொடுப்பார்கள் என நம்பிக்கை இருக்கிறது. அகத்திணை என்பதற்கு ஒழுக்கமான காதல் என்று அர்த்தம். காதலுக்காக எதையும் தியாக செய்யலாம் – காதலை தவிர என்பதை உணர்வு பூர்வமாக சொல்லக்கூடிய ஒழுக்கமான ஒரு காதல் கதை தான் இந்த “ அகத்திணை” பழந்தமிழ் இலக்கியத்தில் காதல் பற்றிய உணர்வுகளை அகத்திணையில் பாடப்பட்டுள்ளதால் கதைக்கு பொருத்தமாக இருக்குமென்று “அகத்திணை “ என்று பெயர் வைத்துள்ளோம். தன் மனைவியை இழந்த கணவன்…இனி வாழும் வாழ்க்கை தன் மகளுக்காக என ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னை அர்ப்பணித்து பாதுகாத்து பாசத்துடன் மகளை வளர்த்து வருகிறார்.

தந்தை மகள் பாசத்திற்கு இடையே தன் உயிரை காப்பாற்றிய நாயகன் மீது காதல் வயப்படுகிறாள் மகள். தந்தை பாசம் ஒருபக்கம்…காதல் மறுபக்கம், காதலா, பாசமா என்று அவள் எடுக்கும் முடிவு, இறுதியில் என்ன விளைவை ஏற்படுத்தியது என்பது கதை. படப்பிடிப்பு சென்னை, புதுக்கோட்டை, காரைக்குடி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்றார் U.P.மருது.

ஒளிப்பதிவு – அகிலன் (இவர் நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்)
பாடல்கள் – வைரமுத்து
இசை – மரியா மனோகர்
எடிட்டிங் – G. சசிகுமார்
ஸ்டன்ட் – மிராக்கில் மைக்கேல்
நடனம் – எஸ்.எல்.பாலாஜி
தயாரிப்பு – ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – U.P.மருது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முன்ஜாக்கிரதை முத்தண்ணா சூர்யா!

பேசிய வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம் என்கிறது ஒரு பொன்மொழி. இது மற்றவர்களுக்கு புரிகிறதோ, இல்லையோ? கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கழுத்தை கம்பி...

Close