புத்தியை பேதலிக்க விடும் பிரகாஷ்ராஜ்…. -இப்படி செய்தார்னா நம்ப முடியுதா?

பிரகாஷ்ராஜூக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள், அதான் கொடுத்தாச்சே… வந்துருவாரு என்று நிம்மதியாக இருந்ததாக ஹிஸ்ட்ரியே இல்லை. கால்ஷீட் குழப்ப விஷயத்தில் ஹிஸ்ட்ரிக்கு பதிலாக ஹிஸ்டீரியா என்று மாற்றி படிக்கிற அளவுக்கு புத்தியை பேதலிக்க விடுவார் மனுஷன்.

அப்படிப்பட்ட பிரகாஷ்ராஜ் சேரனின் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்திற்கு கால்ஷீட் கொடுத்தாராம். அதுவும் எப்படி? போனிலேயே பிரகாஷை அழைத்த சேரன், ‘இப்படியொரு கேரக்டர் இருக்கு. நீதான் பண்ணணும் நண்பா’ என்று அழைக்க, விமான டிக்கெட், ரூம் ரென்ட், இத்யாதி இத்யாதி செலவுகளை அவரே ஏற்றுக் கொண்டு இரண்டு நாட்கள் சென்னையில் தங்கி நடித்துக் கொடுத்தாராம். ஒரு பைசா கூட சம்பளமும் கேட்கவில்லையாம். இந்த படத்தின் இயக்குனராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் இருக்கிறார் சேரன். அதற்காகதான் இந்த சலுகை.

நம்பிட்டோம்…

Read previous post:
முதல்வரை சந்திக்கணும்… -இயக்குனர் பாலசந்தர் முயற்சி

இயக்குனர் சிகரம் பாலசந்தருக்கு இன்டஸ்ரியில் எப்போதும் மரியாதை உண்டு. ஏனென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினியையும், கலைஞானி கமல்ஹாசனையும் அறிமுகப்படுத்தியவர் என்பது மட்டுமல்ல, அவர்கள் இருவருமே பாலசந்தர் அழைத்தால்,...

Close