பூஜா எங்கேயும் போகல…
பூஜா எங்கேயிருக்கிறார்? சமீபகாலமாக பிரஸ்காரர்களை அலையாய் அலைய வைத்த கேள்வி இது. பெங்களூரில் வேலை பார்த்து வந்த பூஜா அப்படியே இலங்கைக்கு போய்விட்டதாக ஒரு தகவல் பரவியது. பூஜாவின் செல்போனுக்கு யார் தொடர்பு கொண்டாலும் அவர் எடுக்காமலே இருந்தார். அதனால் இந்த தகவலை இன்னும் உர்ஜிதப்படுத்தினார்கள் இங்கே. ஆனால் விடியும் முன் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த பூஜா, இந்த யூகங்களையெல்லாம் தவிடுபொடியாக்கினார். அதே நேரத்தில் இங்கிருந்து வருகிற எந்த செல்போன் அழைப்புகளையும் தான் எடுக்கவில்லை என்ற உண்மையையும் அவரே தன் வாயால் ஒப்புக் கொண்டது பெரிய விஷயம். பரதேசி படத்தில் நடிக்க முதலில் இவர் கமிட் ஆன சிறிது நாட்களிலேயே இந்த விடியும் முன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாராம். பரதேசி ஆரம்பிக்கவே தாமதமானதால்தான் பாலாவின் அனுமதியோடு இந்த படத்தில் நடிக்க போனாராம். இவ்வளவு தகவலையும் இந்த மேடையில் விளக்கமாக சொன்னார் பூஜா. முன்னதாக பூஜா உமாசங்கர் என்று பெயரை மாற்றி வைத்திருக்கும் அவர், இந்த உமா சங்கர் தன் அப்பாதான் என்று விளக்கிவிட்டதால் ஒரு மாபெரும் கிசுகிசுவிலிருந்து தப்பிக்கவும் நேர்ந்தது.