பெட்டியில் துப்பாக்கி தோட்டா… விமான சோதனையில் சிக்கிய தமிழ் நடிகை

இந்த சோதனை சாவடிகளால் பெருத்த சோதனைக்கு ஆளாவது நடிகைகள்தான். கண்ணும் கண்ணும் வைத்தது போல சில விஷயங்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, விஷயத்தை வெளியில் கசிய விடுவதால், சம்பந்தப்பட்ட நடிகைகளின் கண்களும் கசிவது வாடிக்கையாகி வருகிறது. பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் இது. படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு போயிருந்தார் இளம் நடிகை ஒருவர். அப்போது ‘சிம்’ என்று இருந்தவர், இப்போது கல்யாணமாகி குழந்தையும் பெற்றதால் ‘தொம்’ என்று இருக்கிறார். எனவே அவர் பெயர் வேண்டாம் ப்ளீஸ்…

அந்த நடிகையின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் நுண்ணறிவு கேமிரா மூலம் சோதனை செய்தார்கள். பெட்டியில் அவர் வைத்திருந்த எல்லா ஐட்டங்களும் பளிச்சென்று தெரிந்தது. அதில் ஒரு அந்தரங்க உபகரணத்தை கண்ட அதிகாரிகள் அதற்கு சோதனை வரி போட்டுவிட்டார்கள். இத்தனைக்கு அது பேட்டரியால் செயல்படுவதுதான். உபகரணத்தின் தன்மை கருதி அதிகம் விவாதம் செய்யாமல் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு சேஃப்ட்டியாக வெளியில் வந்தார் நடிகை. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் இந்த செய்தி கிசுகிசுவாக வெளிவந்துவிட, அவரை வெட்கமும் கோபமும் வாட்டி எடுத்தது பல மாதங்களுக்கு.

சரி… இப்போது நடந்த மேட்டர் என்ன?

என்னமோ ஏதோ படத்தின் நாயகி ராகுல் ப்ரீத் சிங் டெல்லி ஏர்போர்ட்டிலிருந்து மும்பைக்கு வந்தார். வந்த இடத்தில் சோதனை செய்தார்களாம். அவரது பெட்டியில் இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் இருக்க, விமான நிலையமே அல்லோலகல்லோலப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள். தரவாக சோதித்ததில் அது ஷுட்டிங்குக்கு பயன்படுத்து பொம்மை துப்பாக்கி என்பது தெரியவர, அட போயி வேலைய பாரும்மா… என்று கோபத்தோடு அனுப்பி வைத்தார்களாம்.

நடிகையோட பொருள் என்றால் நாக்கில் எச்சில் ஊற பார்க்கிற வழக்கம் எப்பதான் தீருமோ?

Rakul Preet Singh detained and let off by Airport Police

Couple of weeks ago Rakul Preet Singh was detained at Delhi Airport as her handbag contained ‘used’ bullet. The actress was puzzled and called her father who is ex-service man and his friends to help her in the matter. When higher police officials landed at the spot and examining the bullet, it was toy bullet used for film shoots. Rakul who was shooting for Ennammo Yedho with Gautham Karthik was shooting a scene with toy revolver and bullet and had dropped the bullet in her bag by oversight. She dropped the bullet in her bag some eight months back and was travelling by air in between. No one had noticed the toy bullet till Delhi Police noticed and detained her. Finally she was let off giving her the warning to be careful in future.

2 Comments
  1. வாசகன் says

    அந்தணா, அந்தச் செய்திய இன்னும் எத்தன நாளைக்குத்தான் தமுக்கடிப்ப? சிம்முக்கு பேரன் பொறந்தாலும் உடமாட்டியா?

  2. rsa says

    anthana machi, sarakku theendu pocha, aracha maavaye araikire?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மலேசிய விமானம் மாயம்: செயல்பாட்டில் இருக்கும் பயணியின் செல்போன்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் அதிகாலையில் காணாமல் போனது. கடல்...

Close