பென்சில் குத்தியது இப்படிதானாம்….

கீழே விழுந்தாலும் துப்பட்டாவுல சேறு படலை என்று சமாளிப்பது நடிகைகளுக்கு வாடிக்கைதான். அப்படிதான் தான் விலக்கப்பட்ட விஷயத்தை வேறொரு காரணம் சொல்லி மறைத்திருந்தார் ப்ரியா ஆனந்த். அவங்க கேட்ட தேதிகள் ஃப்ரியா இல்லை என்பதுதான் அவர் சொன்ன காரணம். ஆனால் இப்போது விஷயம் வெளியே கசிய ஆரம்பித்துவிட்டது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிகராகிவிட்டார் அல்லவா? இந்த படத்தில் முதலில் இவருக்கு ஜோடியாக நடிக்க அழைக்கப்பட்டவர் ப்ரியா ஆனந்த்துதான். அவர் பிரகாஷுக்கு அக்கா போலிருப்பதால் அவரை நீக்கிவிட்டதாக கூறினார்கள். (அது அழைப்பதற்கு முன்னால் தெரியாதாக்கும்)

அதற்கப்புறம் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஹிட் சென்ட்டிமென்ட்டின் காரணமாகவும், ஜி.வி.பிரகாஷுடன் சேர்த்து நிற்க வைத்தால் ஜாடிக்கேற்ற மூடி போலவும் இருப்பதால்தான் இந்த அழைப்பு. ஊருக்கெல்லாம் தனது சம்பளம் நாற்பது என்று கூறி வந்த ஸ்ரீதிவ்யா இந்த படத்திற்காக பதினெட்டு லட்சத்திற்கும் குறைவாக வாங்கியிருக்கிறாராம். (வாங்கியிருக்கிறார் என்ன, பேசியிருக்கிறார். மிச்ச மீதி பாக்கி வைக்காமல் வந்து சேர்வதாக)

சரி… இவருக்கு முன்னால் அழைக்கப்பட்ட ப்ரியா ஆனந்த் எவ்வளவு கேட்டாராம்? நாற்பது லட்சம் சம்பளம் கேட்டாராம். உபரி செலவுகளையும் சேர்த்தால் ஐம்பதில் போய் நிற்கும் என்பதால்தான் அவரை நீக்கிவிட்டு ஸ்ரீ திவ்யாவை அழைத்ததாக இப்போது தெள்ளந்தெளிவான ஒரு மேப்பை விரித்துக் காட்டுகிறார்கள் கோடம்பாக்கத்தில். தனது வாய்ப்பை தட்டிப் பறித்த ஸ்ரீதிவ்யாவின் போட்டோவை நாளிதழ் வார இதழ்களில் பார்த்தால் கூட அந்த பக்கத்தை மூடி வைத்துவிட்டுதான் நகர்கிறாராம் ப்ரியா ஆனந்த்.

இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டால் சிண்டுபிடி நிச்சயம்.

Priya Anand dropped from ‘Pencil’ on remuneration

Music Composer GV Prakash will be debuting in Tamil films with Pencil. Priya Anand was originally cast to pair opposite to him. However few days later, the production house announced that Sri Divya of Varuthapadatha Valibar Sangam replaced Priya Anand. Priya on her part has said that even before she read the script and gave her consent the makers have announced the cast. Also there were clashing of call sheet dates which made her to withdraw from the cast. However now the news trickling in from the unit says that Priya Anand had demanded a salary of Rs.40 lakhs plus other allowances and expenses which comes to about Rs.50 lakhs, while Sri Divya has agreed to do the film for Rs.28 lakhs. Also, Sri Divya appears to be perfect match as compared to Priya who seems to be little elder, says the unit sources, which tilted the balance.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லட்சுமிமேனனை பீதிக்குள்ளாக்கிய இயக்குனர்

பதக்கம் அணிவிக்கிறேன்னு கழுத்தையே காலி பண்ணுற வேலையை மிக நுணுக்கமாக செய்வதில் கோடம்பாக்கத்திற்கு நிகர் அதுவேதான். பாராட்டினால் ஒரேயடியாக பாராட்டுவதும், காலை வாரிவிட நினைத்துவிட்டால் ஒரேயடியாக பல்...

Close