பெருந்தன்மையே, உன் பேர்தான் விஜய் அண்டு மோகன்லாலா ?
நாரதர் கொடுத்த மாம்பழம் கதிதான் போலிருக்கிறது ஜில்லாவுக்கு. ‘நான்தான் மொத்தல்ல…’ என்று இருபெரும் இமயங்கள் அடித்துக் கொள்வார்கள் என்று நாக்கை தொங்கப் போட்டு நரிகள் காத்திருக்க, பெருந்தன்மையே, உன் பேர்தான் விஜய் அண்டு மோகன்லாலா என்று கேட்க வைத்துவிட்டது அந்த சம்பவம்.
பொதுவாக ஒரு படத்தில் இரண்டு பெரிய நடிகர்கள் இருந்தால் சீனியாரிடி சண்டைகள் வரும். இருதலை கொள்ளி எறும்பாக சிக்கி, துரும்பாக இளைத்துப்போவார்கள் இயக்குனர்களும். ஆனால் துவக்கத்திலிருந்தே மோகன்லால் விஜய் விஷயத்தில் ரிலாக்ஸ்டாக இருந்தாராம் டைரக்டர் நேசன். இருவருமே அவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டார்களாம். படம் முடிந்தாயிற்று. டைட்டிலில் பெயர் போட வேண்டும். யார் பெயரை முதலில் போடுவது? இந்த கேள்விக்குள் புதைந்து கிட்டதட்ட நடுக்கத்திற்கு ஆளாகிவிட்டார் நேசன். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியிடம் ஆலோசனை கேட்டால் அவர் என்ன செய்வார். அவங்ககிட்டயே கேட்டு முடிவு பண்ணிக்கங்க என்று கூறிவிட்டாராம்.
தயங்கி தயங்கி இந்த விஷயத்தை முதலில் மோகன்லாவிடம்தான் எடுத்து சென்றார் நேசன். பதறிப்போன மோகன்லால், தமிழ்ல அவர்தான் பெரிய ஹீரோ. நீங்க அவர் பெயரையே முதல்ல போடுங்க. எனக்கு எவ்வித சங்கடமும் இல்லை என்று சொல்லிவிட, ரிலாக்ஸ் மூடில் விஜய்யிடம் வந்தார் நேசன். சார்… மோகன்லாலிடம் பேசினேன். அவர் இப்படி சொன்னார் என்று சொல்ல, பதறிப் போனாராம் விஜய். அவரோட அனுபவம்தான் என்னோட வயசு. அவரு பெயரை எனக்கு பின்னால் போடுவதா? ம்ஹும் நான் அதற்கு ஒப்புக் கொள்ளவே மாட்டேன். முதல்ல அவரு பெயரை போடுங்க என்று கூறிவிட்டாராம். மறுபடியும் சிக்கலில் தவிக்கிறார் நேசன்.
இந்த ஞானப்பழத்தை சரியா வகுந்து கொடுக்குற ஐடியா இருப்பவர்கள் நேசனுக்கு ஒரு போன் போட்டு நெஞ்சிலிருப்பதையெல்லாம் கொட்டலாம்!
Vijay and Mohanlal show maturity in magnanimity
Vijay and Mohanlal combo’s Jilla is being readied at swift pace to catch up with the release date. When titling episode is to be incorporated director Nesan was confused as to whose name should he show in the title first – Vijay or Mohanlal. As per the guidance of his producer RB Choudhary, he approached Mohanlal hesitatingly. Mohanlal without battling his eyelids told the director to show Vijay’s name in the title first as he is the popular actor in Tamil. When it was informed to Vijay, he immediately advised his director to show Mohanlal’s name in the title, first, and added that his age is Mohanlal’s experience in the industry.
Nesan has now new complication as he is yet to figure out how he can resolve the issue.