பேயாய் அலையும் பாலா பட ஹீரோயின்
எந்த காலத்திலோ வந்த ஜெகன்மோகினியாக இருந்தாலும் சரி, சமீபத்தில் வந்த பீட்சாவாக இருந்தாலும் சரி, பேய் கதை என்றாலே ஒரு வித அச்சத்தோடு தியேட்டருக்குள் நுழையும் ரசிகர்கள், அப்படத்தை ஆர்வத்தோடு ரசித்து ஓட வைப்பார்கள். இத்தகைய மினிமம் கியாரண்டி மிரட்டல் படங்கள் அடிக்கடி வந்தாலும், சில படங்கள் நாலு ராத்திரிகளுக்கு கொட்டாவி கூட விட வைக்காது. அதிலேயும் ஆவி இருப்பதால்தான் இந்த அட்ராசிட்டி.
அப்படியொரு திகிலான பேய் கதையாக உருவாகிக் கொண்டிருக்கிறது ‘கல்பனா ஹவுஸ்’. இதில் ஹீரோயினாக நடிப்பவர் மதுஷாலினி. ‘அவன் இவன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தாரே, அவரேதான். மைசூர் காட்டுக்குள் நடந்த திகில் சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு இந்த கதை உருவாகியிருக்கிறதாம். இந்த படத்தை முதலில் கன்னடத்தில் தயாரித்திருக்கிறார்கள். ஹிட். அதற்கப்புறம் தெலுங்கில் தயாரித்திருக்கிறார்கள் அங்கேயும் ஹிட். விடுவார்களா…? இதோ தமிழிலும் தயாராகிக் கொண்டிருக்கிறது கல்பனா ஹவுஸ். இந்த படத்தை குமார் என்ற புதுமுக இயக்குனர் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
காட்டு பங்களா ஒன்றில் குடும்பத்தோடு ஓய்வெடுக்க செல்லும் என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி அங்கு நடக்கும் திகில் சம்பவங்களால் எப்படி அரண்டு போகிறார் என்பதும், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேரும் தொடர் ஆபத்துகளும், ரசிகர்களை சீட் நுனிக்கு தள்ளும் என்கிறார் டைரக்டர் குமார். இறந்து போன பெண் ஆவியாக வந்து பழிவாங்குகிறாளா? அல்லது அங்கு நடக்கும் சம்பவங்களுக்கு வேறு காரணங்கள் உள்ளதா என்பதை வெண் திரையில் காண்க என்கிறார் அவர்.
டைரக்டர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் நடிக்கும் போதே தென்காசியின் அடர்ந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. பல வாரங்கள் அங்கேயே கிடந்து அல்லல்பட்டுதான் நடித்துக் கொடுத்தார் மதுஷாலினி. இது அவரது ராசி போலிருக்கிறது. இந்த படத்திற்காகவும் மைசூர் காட்டுக்கு கொண்டு போனார்களாம் அவரை. காட்டு கொசுவிலிருந்து, அங்கிருக்கும் சிலந்திகள் வரை மதுஷாலினியை விரட்டியதாம். அவைகளிடமிருந்து தப்பித்துதான் மனிதர்களை மிரட்டியிருக்கிறார் அவர்.
முன்பெல்லாம் பேய் என்றால் கோரமுகத்தை காட்டுவார்கள். இந்த படத்தில் அழகான மதுஷாலினியைதான் பேயாக காட்டுவார்களோ என்னவோ?
ஆர்.நாகராஜ் தயாரித்திருக்கும் இந்த படத்தை பார்த்திபன் ஒளிப்பதிவு செய்ய, லியாண்டர் இசையமைத்திருக்கிறார்.
Kalpana House, a remake from Kannada film is readying for release
Kalpana House was initially made in Kannada and was a super hit, which was then remade in Telugu where too it did good business. Now the makers are remaking the film in Tamil with the same title, Kalpana House. The film is about the incidents that happen during the vacation visit of the police officer and his family to a bunglow in Mysore. The officer was puzzled at the incidents and the dangers that his family members face. Is it due to the acts of the evil in the form of a young girl or is there something else behind the incidents, will be the suspense of the film, the director Kumar, who debuts with this film, explains.
Madhu Shalini who played female lead opposite to Arya in Bala’s Avan Iavan, will come as the charming ‘ghost’ in the film. The entire film was shot in Mysore forest area and the team faced lot of difficulties while shooting the film, the director said.
R. Nagaraj is producing the film which has Parthiban is in charge of camera and Liander will score the music.