பேய்கள் உள்ளது என்று கூறுபவன் மூடன்

இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குனராகவும், தெலுங்கு படவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “பீருவா” உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கண்மணி முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குஇயக்குனராக அறிமுகமாகிறார்.

பேய்கள் ஜாக்கிரதை எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்

இவ்வுலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், பேய்கள் உள்ளது என்று கூறுபவன் மூடன் என்று கூறும் ஒரு கதாபாத்திரமும் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்கிறது.

இவ்விருவரையும் இணைக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவம் எதனால் நடைபெறுகிறது. சம்பவத்திற்கு பின் அவர்கள் படும் குழப்பங்களை நகைச்சுவைபிண்ணனியுடன் கலந்து கூறியிருக்கும் படமே “பேய்கள் ஜாக்கிரதை”

ஸ்ரீ சாய் சர்வேஷ் எண்டர்டைன்மெண்ட் சார்பாக ஜி.ராகவன் அவர்கள் இப்படத்தை தயாரிக்கின்றார்.

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றபுறங்களில் நடைபெறுகிறது.

நடிகர்கள் விவரம்:

ஜீவரத்னம் (கதாநாயகன்)

ஈஷான்யா (கதாநாயகி)

தம்பி ராமையா

நரேஷ் (பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர்)

“நான் கடவுள்” ராஜேந்திரன்

மனோ பாலா

ஜான் விஜய்

“ஆடுகளம்” ஜெயபாலன்

தருண் குமார்

“பிளாக்” பாண்டி

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

இயக்குனர் – கண்மணி

தயாரிப்பு – ஜி. ராகவன்

இசை – மரிய ஜெரால்டு

ஒளிப்பதிவு – மல்லிகார்ஜின்

படத்தொகுப்பு – சுரேஷ் ஆர்ஸ்

கலை – வி. ராஜா BFA

பாடல்கள் – கபிலன் வைரமுத்து, விவேகா

நடனம் – அசோக் ராஜா

சண்டை – “டேன்ஜர்” மணி

மக்கள் தொடர்பு – நிகில்

தயாரிப்பு நிர்வாகம் – வெங்கட் மாணிக்கம்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சீரடி சாய்பாபாவாக தலைவாசல் விஜய்  நடிக்கும் “ அபூர்வ மகான் “

டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.N.S.செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகும் படம் “ அபூர்வ மகான் “ இந்த...

Close