பைக்கிலேயே 16 மணி நேர பயணம்… – அஜீத்தின் ரேஸ், ரசிகர்களுக்கு மாஸ்!

ரசிகர்களின் மாஸ் பிரியரான அஜீத், அடிப்படையில் ஒரு ரேஸ் பிரியர். அதை அவ்வப்போது நிரூபித்தும் வந்திருக்கிறார். ஆரம்பம் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே இருக்கிற நிலையில் அவரது பயணம், இத்தனை வருட திரையுலக பயணத்தை விட சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது அவரது ரசிகர்களுக்கு. ஆனால் எதற்கும் ஒரு காரணம் வேண்டுமல்லவா? இந்த பயணத்திற்கு அஜீத் சொல்லும் காரணம், சாலை விழிப்புணர்வு.

‘பி எம் டபிள்யூ கே 1300 எஸ்’ என்கிற நவீன ரக பைக்கை வாங்கியிருக்கிறார் அஜீத். இதில் கடந்த மாதத்தில் ஒரு முறை பெங்களூர் சென்றுவிட்டு வந்தார். இந்த முறை மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து சுமார் 16 மணி நேரத்தில் சென்னைக்கு வந்திருக்கிறார் அஜீத்.

அவர் நடித்த ‘ஆரம்பம்’ படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்தின் ‘பேட்ஜ் ஒர்க்’ மும்பையில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக அஜீத் மும்பை சென்றார். மும்பையில், ‘ஆரம்பம்’ பட வேலையை முடித்துக்கொண்டு அங்கிருந்து மராட்டிய மாநிலம் புனே சென்று, ‘வீரம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடைய மோட்டார் சைக்கிள் விமானம் மூலம் புனேக்கு கொண்டு வரப்பட்டது

அங்கிருந்து நண்பர் மனோகருடன் பைக்கிலேயே சென்னைக்கு கிளம்பிவிட்டார் அஜீத். வழியில், இருவரும் பெங்களூரில் 3 மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள்.

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை சொல்வதற்காகதான் இந்த பயணத்தை மேற்கொண்டாராம் அஜீத். யார் காதில் விழுகிறதோ இல்லையோ, அஜீத் ரசிகர்களுக்கு அவர் சொல்வதுதானே வேத வாக்கு?

ஹெல்மெட் கடைகளில் சேல்ஸ் அதிகமா இருந்தால், அதுக்கு அஜீத்தும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Ajith’s passionate bike ride from Pune to Chennai

 

Thala Ajith, a passionate biker, took a road trip from Pune to Chennai. After finishing a schedule of his forthcoming Tamil movie Veeram, the actor was on a road trip to understand the traffic culture and enjoy the ride on the highways. He was joined by his friend Manohar for the trip. He covered 1,354 kilometers on his journey to reach the destination. Ajith took 19:26 hours to land in Chennai. He rested for about 3 hours at Bengaluru, before reaching Chennai. The actor started his journey from Navnit Motors Pvt Ltd, Pune and ended in Valmiki Nagar Post Office, Chennai. Ajith rode BMW K series 1300, which was airlifted from Chennai to Pune. He took AH 47/NH 4 to reach Chennai. It was a road safety campaign, where he drove the bike with all the safety gears. Ajith took the journey with the help of a road map. On his way, he stopped at many places to have lunch and dinner and to enjoy the local foods. “This road trip is to continue the road safety campaign and also to get to know more about the traffic culture in India. He has always wanted to discover that,” he told to popular English daily. Earlier he made a similar road safety campaign travelling between Chennai and Bengaluru.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
செல்வராகவனுக்கு கமல் ட்ரீட்மென்ட்! யாரும் அறியாத மூன்றாம் உலக அவஸ்தைகள்

  ‘விஸ்வரூபம்’ படத்திற்கு பிரச்சனை வந்தபோது கமல் பேட்டியளித்தாரல்லவா? அந்த கவலைப் பேச்சை மறுபடியும் ரீவைண்ட் செய்து பார்க்கிற அவரது ரசிகர்கள் தங்கள் கண்ணிலிருந்து ‘பிளட்’டாபிஷேகம் செய்வார்கள்....

Close